வீட்டில் நிறைய பழைய துணிகள் இருக்கா? இந்த பிரச்சனைகள் வரும்
வீட்டில் நிறைய பழைய துணிகள் சேர்ந்து இருந்தால் அதனால் பல பிரச்சனைகள் வரும் என ஜோதிடம் மூலமாக காணப்படுகின்றது.
துரதிர்ஷடம்
நாம் எல்லோரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு விடயத்தில் கவலை பட்டிருப்போம். யாருக்கு தான் கைநிறைய சம்பாதித்து அதன் மூலம் இந்த சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ பிடிக்காது.
எல்லோருக்கும் பிடிக்கும் அப்படி இருக்க நமக்கு வரவேண்டி சில விடயங்கள் கை வரைக்கும் வரும் பின்னர் அப்படியே வராமல் போய் விடும். இதற்கு காரணம் அதிர்ஷ்டம் இன்மை தான்.
எ்ன தான் நாம் கடின உழைப்பு உழைத்தாலும் அதை தக்க வைத்து கொள்ளவும் அதன் மூலம் நல்ல விடயங்களை பெறவும் அதிர்ஷ்டம் என்பது வேண்டும். அப்படி பார்த்தால் அதிர்ஷ்டத்தை கெடுக்கும் பொருட்கள் வீட்டில் இருக்க கூடாது அல்லவா? அப்படி சிலர் வீட்டில் வைத்திருக்கும் ஒரு பொருள் தான் பழைய உடைகள்.

பழைய துணி
வீட்டில் ஏதோ ஒரு நல்ல காரியம் நடக்க போகுது என்றால் அதற்கு நல்ல சக்திகள் எதிர்மறை ஆற்றல்களும் வேண்டும். இதற்கு வீடு சுத்தமாக இருபபதுடன் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களும் ஒழுங்காக இருக்க வேண்டும்.
உங்க வீட்டில் பழைய துணிகள் நிறைய இருக்கா? பழைய துணிகளை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு வீட்டில் நிறைய பழைய துணிகளை பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களா?
பலரும் ஒரு சில துணிகளை ஒரு தடவை இரண்டு தடலை போட்டு விட்டு அப்படியே வைத்திருப்பார்கள். சிலர் சில உடைகளை அப்படியே போடாமலும் வைத்திருப்பார்கள்.
ஆனால் மிகவும் பழைய ஆடைகள் பயன்படுத்தாத பழைய துணிகளை வீட்டில் வைத்திருப்பது ஜோதிட ரீதியாக எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?
வீட்டில் பழைய துணிகள் நிறைய சேர்த்து வைத்தால் என்ன ஆகும், பழைய துணிகளை என்ன செய்ய வேண்டும், பழைய துணிகளை தானம் செய்யலாமா கூடாதா என்பது பலருக்கும் தற்போது ஒரு சந்தேகமாவே உள்ளது.

என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் சொட்டி கொண்டிருப்பது, கிழிந்த துணிகளை தைக்காமல் அணிந்து கொள்வது, பழைய பொருட்களையும் பழைய துணிகளையும் சேகரித்து வைப்பது போன்றவை வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
நீங்கள் பயன்படுத்தாத மற்றும் பயன்படுத்தவே மாட்டீர்கள் என்று சொல்லப்படும் ஏராளமான கிழிந்த ஆடைகளும் பழைய ஆடைகளும் வீட்டில் வைத்திருக்கும் பொழுது அது எதிர்மறையாற்றலை ஏற்படுத்தும்.
இதற்கு காரணம் ஆடை என்பது சுக்கிரனை குறிக்கும் கிரகமாகும். சுக்கிரன் தான் பணம், செழிப்பு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் அதிபதியாகும்.

சுக்கிரன் வலுவாக இருக்கும் நபர்கள் கண்ணை பறிக்கும் தோற்றத்தில் நேர்த்தியாக ஆடை அணிந்து, வாசனை திரவியங்கள், உள்ளிட்டவற்றை பயன்படுத்துவார்கள்.
எனவே சுக்கிரன் ஒருவர் மீது வலுவாக இருந்தால் அவர்கள் ஆடைகள் அணிந்தால் கூட அது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள். சுக்கிரன் பலவீனமாக இருக்கும் பொழுது பழைய ஆடைகள், ஏனோ தானோ என்று உடுத்திக் கொள்வது உள்ளிட்டவை காணப்படும்.
எனவே பழைய ஆடைகள் பலவீனமான சுக்ரனுடன் தொடர்புடையது என்பதால், வீட்டில் பயன்படுத்தாத துணிகளை குவித்து வைக்காதீர்கள்.
பழைய, மங்கிப்போன மற்றும் கிழிந்த துணிகளை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை சக்தியை அதிகரிக்கும். இது சுக்கிரனின் எதிர்மறையான அறிகுறியாகும்.

பிரச்சனைகள்
இது பண வரவில் சிக்கல்கள் மற்றும் திருமணத்தில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
உங்கள் வீட்டில் அதிகமாக பழைய துணிகள் குவிந்து கிடப்பது சனியின் ஆதிக்கத்தையும் குறிக்கலாம். இது குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தில், பழைய ஆடைகள் சனி மற்றும் எதிர்மறை ராகுவுடன் தொடர்புடையவை என்று நம்பப்படுகிறது.
எனவே பழைய ஆடைகளை ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்துங்கள் அல்லது பழைய துணிகளை, அது நன்றாக இருக்கும் பட்சத்தில், யாருக்காவது தானமாக கொடுக்கலாம். இல்லையென்றால் பழைய துணிகளை குப்பை என்று அப்புறப்படுத்துங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).