Video:கண்கவர் நிறத்தில் மாம்பழ அறுவடையை ஆரம்பித்த றீ(ச்)ஷா
சுவை மிகுந்த மாம்பழங்களை இலங்கையிலுள்ள றீச்ஷா பண்ணை அறுவடை செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இலங்கை - கிளிநொச்சி (kilinochchi)இயக்கச்சியில் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை அமைந்துள்ளது.
இந்த பண்ணையில் காய்கறிகள், கீரை மற்றும் பழங்கள் விளைவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அந்த வகையில், இலங்கையில் இது கோடைக்காலம் என்பதால் (Reecha Organic Farm) மாம்பழ பயிர் செய்கை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பசளைகளை பயன்படுத்தி இந்த மாம்பழச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை ஒரு விசேட அம்சமாகும்.
இலங்கையில் பிரபல சுற்றுலாத்தலமாக இருக்கும் றீச்ஷா பண்ணை சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு பல்வேறு பயிர்ச்செய்கைகள் பயிரிடப்படுகின்றன.
இந்த புதிய முயற்சியால் இலங்கை வாழ் மக்கள் அதிகம் பயனடைகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |