பிரபல பிக்பாஸ் நடிகர் திடீர் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்
பிக்பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஹரிஷ் கல்யாணுக்கு இன்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஹரிஷ் கல்யாண்
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிஸ் கல்யாண் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது மாதவனுக்கு பின்பு பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வரும் இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு படங்களில் நடித்து பயங்கர பிஸியானார்.
அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவருக்கு இன்று உறவினரக்ள் மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரின் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.