இறப்பதற்கு முன்னர் ஹரி வைரவன் கடைசியாக அனுப்பிய மெசேஜ்! பிரபல நடிகர் உருக்கம்
வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்திருந்த பிரபல நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் காலமானார்.
சுசீந்திரன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியாக சூப்பர் ஹிட்டடித்த படம் வெண்ணிலா கபடி குழு.
இந்தபடத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் நண்பராக நடித்திருப்பார் ஹரி வைரவன், தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.
உடல்நிலை மோசம்
கடந்த சில மாதங்களாகவே இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போக, உடல் முழுவதும் வீங்கிப்போய் நடக்ககூட முடியாமல் சிரமப்பட்டார்.
இதுதொடர்பான தகவல்கள் வெளியானது பிரபலங்கள் பலரும் ஹரி வைரவனுக்கு உதவிகள் செய்து வந்தனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் ஹரி வைரவனுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
என் கணவர் மீண்டு வருவார், அவரை விரைவில் திரையில் பார்க்கலாம் என ஹரி வைரவனின் மனைவி உருக்கமாக பேசியிருந்தார்.
இதற்கிடையே ஹரி வைரவனின் உடல்நிலை மேலும் மோசமடைய கடந்த 3ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் காலமானார்.
இவரது மறைவுக்கு நடிகர் சூரி, விஷ்ணு விஷால் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தனர்.
கடைசி வாய்ஸ் மெசேஜ்
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணு விஷால், கடந்த ஆறு மாதங்களாகவே ஹரி வைரவனுடன் தொடர்பில் இருக்கிறேன், அவருக்கு தேவையான பண உதவிகளையும் செய்து வருகிறேன், இது யாருக்கும் தெரியாது.
ஹரி வைரவனின் மனைவியுடன் கூட பேசியுள்ளேன், அவரது குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளேன்.
அவர் எப்போதுமே என்னை மாப்ள என்றே அழைப்பார், கடைசியாக ”உன்னுடைய உதவிக்கு நன்றி மாப்ள” என வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார் என தெரிவித்துள்ளார்.