வெண்ணிலா கபடி குழு நடிகர் திடீர் மரணம்! கடும் சோகத்தில் திரையுலகினர்
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற சில படங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் ஹரி வைரவன்.
சூரியுடன் சேர்ந்து பரோட்டோ காமெடியில் நடித்திருப்பார், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமையவில்லை.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார், இதயநோயுடன் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட கால்கள் வீங்கி நடக்ககூட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இதையறிந்த திரையுலகினர் பலரும் ஹரி வைரவன் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஹரி வைரவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர், வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் இறைவனடி சேர்ந்தார்/ அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
மதுரையில் அவரது சொந்த ஊரான கடச்சனேந்தலில் இறுதிச்சடங்குகள் நடைபெறவிருப்பதாக அவரது குடும்பத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.