நடமாடும் நகைக்கடை அதிபர் ஹரி நாடார் அதிரடி கைது! பரபரப்பு சம்பவம்
தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை என பலராலும் அறியப்படுபவர் ஹரி நாடார். சுமார் 10 கிலோ தங்க நகைகளை எப்போதும் உடம்பில் அணிந்து கொண்டு சுற்றுவார்.
இவர், நடிகை வனிதாவுக்கு ஜோடியாக 2கே அழகான காதல் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடார் போட்டியிட்டார்.
ஆலங்குளம் தொகுதியில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பூங்கோதை ஆலடி அருணா தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், ரூ.16 கோடி மோசடி வழக்கு தொடர்பாக கேரள மாநிலம் கோவளத்தில் பெங்களூரு போலீசாரால் ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைக்காக அவரை பெங்களூருவுக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள ஹரி நாடார் மீது 15 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் ஒரு வழக்கில் தான் தற்போது ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார்.
