ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன ஆச்சு... விளையாடாததற்கு வெளியான காரணம்!
சென்னை மற்றும் குஜராத் அணிகள் நேற்றைய தினத்தில் மோதியது. இதில், சென்னை வலுவான ஸ்கோரை அடித்திருந்தாலும், ஒற்றை ஆளாக நின்று டேவிட் மில்லர் 94 ரன்களை அடித்து குஜராத் அணியிக்கு வெற்றி வாய்ப்பை தேடிதந்தார்.
இவருக்கு பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்த போட்டியில் முக்கியமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடமால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.
கேப்டனாக ரஷித் கான் வழி நடத்தினாலும், ஹர்திக் ஏன் விளையாட வில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். போட்டிக்கு முன்பாக மை மேன் என தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஹர்டிக் பண்டியா அதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் பாண்டியா இந்த போட்டியில் இருந்து விலக என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிராக அற்புதமாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அந்த போட்டியின் போது இறுதிநேரத்தில் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார்.
அதனால் தசைபிடிப்பு காரணமாகவே விளையாட முடியாமல் வெளியில் அமர்ந்துள்ளார். இருப்பினும் இது பெரிய காயம் இல்லை என்றும் அடுத்த போட்டிக்கான அணியில் நிச்சயம் அவர் இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும், புதிய அணியாக வந்த குஜராத் அணியை ஹர்திக் பாண்டியா வழி நடத்தி முதல் இடத்தில் தக்க வைத்திருப்பது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
My main man ❤️ pic.twitter.com/5vmf6Qt7R4
— hardik pandya (@hardikpandya7) April 17, 2022