இந்திய வீரர்கள் யாரும் செய்யாத.. புதிய சாதனையை படைத்த ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் நேற்றைக்கான போட்டியில், ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபினவ் மனோகர் 21 பந்துகளில் 35 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா, 42 பந்துகளில் 50* ரன்கள் எடுத்தனர். '
163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, கேப்டன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தாலும், அபிஷேக் ஷர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த வில்லியம்சன், 57 ரன்களில் வெளியேறினார்.
ஆனால், பின்னர் வந்த ஆடிய நிகோலஸ் பூரன் 18 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் அடித்தார். அவரது அதிரடியால் கடைசி ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியின் போது, ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
அதன்படி, ஹர்திக் பாண்டியா 1 சிக்ஸர் அடித்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் தனது 100வது சிக்ஸரை பதிவு செய்துள்ளார்.
சென்னை அணியின் தொடர் தோல்வி.. கேப்டன் பதவியில் இருந்து விலகும் ஜடேஜா?
சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவிரைவாக 100 சிக்ஸர்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஒட்டுமொத்தமாக ரசல், மற்றும், கெய்ல் அடுத்தப்படியாக குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையிலும், ஹர்திக் பாண்டியா மூன்றாவது வீரராக இடம்பெற்றுள்ளார்.