சென்னை அணியின் தொடர் தோல்வி.. கேப்டன் பதவியில் இருந்து விலகும் ஜடேஜா?
ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்துள்ளது. சிஎஸ்கேவின் மோசமான சீசனாக பார்க்கப்படும் 2020-ம் ஆண்டில் கூட சிஎஸ்கே இப்படி ஒரு தோல்வியை பதிவு செய்யவில்லை.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் கனவு கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது. எஞ்சியுள்ள 10 போட்டியில் 8 போட்டியில் வென்றால் மட்டுமே சிஎஸ்கேவில் பிளே ஆப் பந்தயத்தில் இருக்க முடியும்.
ஐபிஎல் வரலாற்றிலேயே அஸ்வின் செய்த முதல் சம்பவம் - ரிட்டயர்டு அவுட் விதிமுறை என்றால் என்ன?
இதனால் ஜடேஜா தலைமையில் அப்படி ஒரு சாதனையை சிஎஸ்கே பெறுமா என்பது சந்தேகமே. கேப்டனாக செயல்பட போதிய சுதந்திரம் ஜடேஜாவிற்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
வெறும் டாஸ் போட மட்டும் தான் ஜடேஜா பெயர் அடிப்படுகிறது. மற்றப்படி அவர் செயல் அதில் குறைவாக தான் உள்ளது.
இதனால் இந்த சீசன் முடிவதற்குள் ஜடேஜா தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கேப்டனாக தோனியையே செயல்பட முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.