10ம் வகுப்பு தேர்வில் ஜஸ்ட் பாஸ் ஆன மகனை கொண்டாடி மகிழ்ந்த பெற்றோர் - வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஜஸ்ட் பாஸ் ஆன மகனை கொண்டாடி மகிழ்ந்த பெற்றோரால் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஜஸ்ட் பாஸ் ஆன மகனை கொண்டாடிய பெற்றோர்
10ம், 12ம்பொதுத்தேர்வில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தாலே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் அனைவரும் வியக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மும்பையைச் சேர்ந்த விஷால் என்ற மாணவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 பாடங்களிலும் 35 மதிப்பெண்களை பெற்று ஜஸ்ட் பாஸ் ஆனார். ஆனால், குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டாயே என்று மகனை திட்டாமல் பெற்றோர்கள் ஜஸ்ட் பாஸ் ஆன மகனை பாராட்டி கொண்டாடியுள்ளனர்.
இவர்களுடைய செயல் மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. இது குறித்து விஷாலின் பெற்றோர்கள் கூறுகையில், விஷாலின் 35 சதவீத மதிப்பெண் கூட உங்களுக்கு பெரிய விஷயம்தான் என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தெய்வமே.. தெய்வமே... நன்றி சொல்வேன் தெய்வமே... என்று பெற்றோரின் செயலுக்கு பாராட்டி தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
मुंबई के रहने वाले 10वीं के एक छात्र ने परीक्षा में 35% मार्क्स हासिल किए.
— Awanish Sharan ?? (@AwanishSharan) June 8, 2023
लेकिन उसके माता-पिता ने दुखी या नाराज होने की बजाय उसकी सफलता को सेलिब्रेट किया. pic.twitter.com/fAa6szayiF