சீறி பாய்ந்த ராஜ நாகத்தை அன்பால் அடக்கிய இளைஞர்: வைரலாகும் காணொளி
ஒரு இளைஞர் ராஜ நாகத்தை தலையுடன் தலை வைத்து அன்பால் அரவணைக்கும் காட்சி தற்போத இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
சமூக வலைத்தளங்களில் பல சுவாரஷ்யமான வீடியோக்கள் வைரலாகி வரும். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. ஆனால் பாம்பு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் பல வைரலாகி வருவதை நாம் கவனித்திருப்போம்.
பாம்புடன் விளையாடுவது, அதைப் பிடிப்பது என்பது போன்ற பல வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த விடியோவில் ஒரு இளைஞர் நாகப்பாம்புடன் இருப்பதைக் காணலாம்.
அந்த இளைஞன் எந்த பயமும் இல்லாமல் நாகப்பாம்பின் முன் அமர்ந்திருக்கிறான். முதலில் பாம்பு ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது, இளைஞர் பாம்பை நெருங்கும்போது, அது படையை விரிவடைத்து தற்காப்புக்காக சீறுகிறது.
ஆனால், சிறிது நேரம் கழித்து பாம்பு படிப்படியாக அமைதியானது. பின்னர், அந்த இளைஞன் தன் கையை எடுத்து பாம்பின் தலையில் வைத்து, பின்னர் பாம்பின் தலையில் தன் தலையை வைத்தான்.
இந்த விடிகோவிற்க பல இணையவாசிகள் ஆச்சரிய கரத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |