இப்படி ஒரு சேலையா? நந்தவனமாகவே மாறி ரசிகர்களை மயக்கும் ஹன்சிகா...
நடிகை ஹன்சிகா மோத்வானி பூக்களால் வடிவமைக்கப்பட்ட ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறந்கடிக்கும் வகையில் கியூட் போஸ் கொடுத்து தற்போது தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஹன்சிகா மோத்வானி
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட காலப்பகுதியில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி
இவர் கதாநாயகியாக நடித்த தளபதி விஜய்யின் வேலாயுதம், புலி, தனுஷின் மாப்பிள்ளை, சூர்யாவுடன் சிங்கம் 2 என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்ட இவரை ரசிகர்கள் குட்டி குஷ்பு என செல்லமாக அழைத்துவருகின்றனர்.
சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த போது, சோஹைல் கதுரியா என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின் பின்னர் சினிமாவில் ரீ என்றீ கொடுத்த ஹன்சிகா பிஸியான நடிகையாக திகழ்ந்துவருகின்றார்.
அவரது நடிப்பில் சமீபத்திய வெப்சீரிஸ் My3 ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து "ரவுடி பேபி", "மேன்" மற்றும் "காந்தாரி" ஆகிய படங்களில் நடித்த இவர் சமூகவளைத்தளங்களிலும் அதிக ஈடுப்பாடு காட்டி வருகின்றார்.
இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி பூக்களால் வடிவமைக்கப்பட்ட ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |