நாத்தனாரை கொடுமை செய்த ஹன்சிகா- பேரிடியாக விழுந்த உயர் நீதிமன்ற முடிவு
நடிகை ஹன்சிகா மோத்வானி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “எங்கேயும் காதல்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து வந்தார். தமிழில் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
கோலிவுட்டிற்கு நுழைந்த போது ஹன்சிகாவை அடுத்த குஷ்பு என்று பலரும் அழைத்து வந்தனர். எங்கேயும் காதல் பல பாடல்கள் இப்ப வரைக்கும் ஹிட்டாகவே இருக்கிறது. அதிலும் “நங்கை நிலவின் தங்கை..”என்ற பாடல் இவருக்காகவே எழுதியது போல இருந்தது.
இதன் பின்னர், தனுஷ் உடன் மாப்பிள்ளை, விஜயுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம் 2 என்று பல வெற்றி படங்களில் நடித்திருந்தார். அத்துடன் நிறுத்தாமல் பிரியாணி, மான் கராத்தே, வாலு, அரண்மனை 2 என்று அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார்.
திருமணம்
அந்த சமயத்தில் திடீரென்று உடல் எடை குறைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறினார்.
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹா கட்டாரியா என்ற தன்னுடைய நண்பரையே திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
வன்முறை புகார் கொடுத்த நாத்தனார்
இப்படியொரு சமயத்தில், நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணி முஸ்கன் நான்சி குடும்ப வன்முறை புகார் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதில் அவர்,“ ஹன்சிகா மோத்வானியும், அவரது தாயார் மோனோ மோத்வானியும், என்னுடைய திருமண வாழ்க்கையில் தலையிட்டு, எனக்கும், எனது கணவருக்கும் இடையில் பிரச்சினையை அதிகப்படுத்தி விட்டார்கள்.
அத்துடன் எனது கணவர், அவரது தாயார் மற்றும் சகோதரி ஹன்சிகா மூவரும் குடும்ப வன்முறையில் ஈடுப்பட்டனர். அவர்களால் தாக்குதலுக்கு உள்ளான நான், ‘பெல்ஸ் பால்சி’ (முகத்தின் ஒருபகுதி தசைகளின் செயலிழப்பு) நோயால் தற்போது அவதிப்படுகிறேன். இவர்கள் மூன்று பேரும் என்னிடமிருந்து விலையுயர்ந்த பொருட்கள், பணத்தை கேட்கிறார்கள். சொத்து முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளனர்..” எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மனு தள்ளுபடி
ஹன்சிகா குடும்பத்திற்கு எதிராக நாத்தினார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யும்படி ஹன்சிகா தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விசாரணையை தொடரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, குடும்ப வன்கொடுமை வழக்கை போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |