ஹோர்மோன் ஊசி போட்டதால்தான் ஹன்சிகா சீக்கிரம் வளர்ந்தாரா?
திரைத்துறையில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை ஹன்சிகா. இவரது கொழு கொழு தோற்றத்தினால் குட்டி குஷ்பூ என்று அழைக்கப்பட்டார்.
இவர் 'ஷக்கலக்கா பூம் பூம்' என்ற சீரியலின் மூலமாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் இவர், அல்லு அர்ஜூனின் தேசமுதுரு என்ற தெலுங்கு படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.
தமிழ் சினிமாவுக்குள் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
image - marathi news
அதனைத் தொடர்ந்து எங்கேயும் காதல், ஆம்பள, வேலாயுதம், புலி, ஒரு கல் ஒரு கண்ணாடி என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார். இவர் தமிழில் மட்டுமில்லாமல் ஏனைய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டி விக்ரம் பிரபுவின் 'துப்பாக்கி முனை' திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
இரண்டு ஆண்டுகள் எந்தப் படத்திலும் நடிக்காத ஹன்சிகா, சமீபத்தில் மஹா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தனது நீண்ட நாள் நண்பரும் தொழில் கூட்டாளியுடான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து, கடந்த டிசம்பர் 04ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.
இவரைக் குறித்த இரண்டு சர்ச்சைகள்
ஹன்சிகா அவரது தோழியின் கணவரை திருமணம் செய்து கொண்டதாக திருமணத்தின்போது ஒரு சர்ச்சை எழுந்தது.
அதுமட்டுமில்லாமல் ஹன்சிகா சீக்கிரமாக ஹீரோயின் ஆகவேண்டும் என்பதற்காக அவரது அம்மா இவருக்கு ஹோர்மோன் ஊசி போட்டதாக ஒரு சர்ச்சை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இது குறித்து ஹன்சிகா அளித்த விளக்கத்தில்,
எனது அம்மா எனக்கு ஹோர்மோன் ஊசி போட்டு விரைவில் என்னைப் பெரிய பெண்ணாக்கி விட்டதாக பல வதந்திகள் பேசப்பட்டு வருகின்றன. அதில் எதுவித உண்மையுமில்லை. எனக்கு ஊசி என்றாலே பயம். அதனால் பச்சைக் கூட குத்திக்கொள்வதில்லை. இந்நிலையில் நான் ஹோர்மோன் ஊசி போட எவ்வாறு சம்மதிப்பேன்.
image - free press journal
ஹன்சிகாவின் அம்மா அளித்த விளக்கத்தில்,
இந்த விடயம் உண்மையாக இருந்திருந்தால், நான் மிகப்பெரிய பணக்காரியாக இருந்திருப்பேன். இந்த செய்தி உண்மையெனில் வேகமாக வளர வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள். எங்கள் குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகள் 12 - 16 வயதுக்குள் வேகமாக வளர்ந்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.