அரண்மனையில் திருமணம் செய்யும் பிரபலம்! வெளியான உண்மை தகவல்..
கடந்த காலங்களில் சினிமாவில் முன்னணியாக நடிகையாக வலம் வந்த ஹன்சிகா மோத்வாணியின் திருமணத்திற்கு பழமை வாய்ந்த அரண்மனை ஒன்று தயார் செய்யபடுவதாக வெளியான தகவல் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.
சின்ன குஷ்பு
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சின்ன குஷ்புவாக வலம் வருந்தவர் நடிகை ஹன்சிகா. இவர் 'மாப்பிளை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழ் முன்னணி நடிகர்களுடன் இணைந்து சில வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக சில காலங்களாக தகவல் வெளியாகி வந்தது.
அரண்மனை
அந்த வகையில் தற்போது இவரின் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் உள்ள 400 ஆண்டுகால பழமையான அரண்மனை தயார் செய்யபடுகிறதாக தகவல் கசிந்து வருகிறது. மேலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் பல கோடி ரூபாய் செலவில் இந்த திருமணம் நடைப்பெற இருக்கிறதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனை அறிந்த ஹன்சிகா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.