சாகசம் காட்ட முயன்று தலைகீழாக தொங்கும் பாண்டா கரடி! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சி
காட்டில் பாண்டா கரடியொன்று சாகசம் எனும் பெயரில் மொக்கை வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காட்டில் பாண்டா செய்யும் சேட்டைகள்
பொதுவாக காட்டில் வாழும் அமைதியான மிருகங்களில் பாண்டாவும் ஒன்று, மிக குட்டியான உருவமும், அதன் அழகுக்காவே பலரும் பாண்டா கரடியை விரும்புவார்கள்.
சீனாவின் சிச்சுவான் பகுதியிலும், மலை பகுதிகளில் அதிகம் காணப்படும் பாண்டா அதிகம் சேட்டையும் செய்யும்.
இந்த வீடியோவில், காட்டில் பாண்டா கரடியொன்று மரத்திலும் அங்குள்ள மலைகளிலும் சாகசம் செய்யும் போது கமராவில் மாட்டியுள்ளது.
இந்த வீடியோ காட்சியை Fred Schultz என்பவர் தன்னுடைய சமூக வலையத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இதனை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.
மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள், இது போன்ற அரிய காட்சிகளை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
Pandas are very nimble, graceful creatures…???? pic.twitter.com/TDcRCTFKgs
— Fred Schultz (@FredSchultz35) November 19, 2022