வாகனங்கள், கடைகளில் எலுமிச்சை- மிளகாய் தொங்க வைக்க காரணம் என்ன?
வாகனங்கள் கடைகள் மற்றும் வீட்டு முற்றங்களில் எலுமிச்சை மிளகாய் தொங்க வைப்பதற்கு உண்மையான காரணம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
எலுமிச்சை மிளகாய் தொங்க வைப்பதன் காரணம்
ஒரு கடையின் நுழைவாயிலிலோ அல்லது வாகனங்களிலோ ஒரு எலுமிச்சை மற்றும் பல மிளகாய்களை சரம் போல கட்டி தொங்க விடுவதை பாாத்திருப்போம்.
ஆனால் இதை பலரும் அலங்காரத்திற்காக என நினைத்திருப்பார்கள். சிலர் திருஷ்டிக்காக என நினைத்திருப்பார்கள். ஆனால் இதன் உண்மையான காரணமோ யாருக்கும் தெரியாது.
ஆனால் இந்த எலுமிச்சை மிளகாய் சரம் தொங்க விடுவதற்கு ஆன்மிக காரணமும் உள்ளது. அறிவியல் காரணமும் உள்ளது. உண்மையாக சொல்ல போனால் இதை தொங்க விடுவது நன்மை தான். எனவே பின்னணி காரணத்தை தெரிந்து கொள்வது அவசியம்.
எலுமிச்சை மிளகாய் அறிவியல் காரணம் - அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதன்படி, எலுமிச்சையில் முதன்மை அமிலமாக சிட்ரிக் அமிலமும், மிளகாயில் கேப்சைசினும் உள்ளது.
இவை இரண்டும் சிறிய பூச்சிகளுக்கு வலுவான இயற்கை தடுப்பு மருந்துகளாகும்.
இதனால் தான் ஆரம்பத்தில் இருந்து மக்கள் வீடுகள், கடைகள் அல்லது உணவுக் கடைகளில் இருந்து ஈக்கள் மற்றும் பூச்சிகளை விலக்கி வைக்க ,இதை முன்னே கட்டி தொங்க வைக்க ஆரம்பித்தனர். இது இந்தியாவில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகளில் ஒரு பூச்சி விரட்டியாக செயல்பட்டன.
எலுமிச்சை-மிளகாய் தொடர்பான ஜோதிட நம்பிக்கை - இந்த எலுமிச்சை-மிளகாய் சரத்தின் ஜோதிட நம்பிக்கை படி சனி பகவானின் ஆதிக்கம் ஒருவரது ஜாதகத்தில் வலுவாக இருந்தால் பல தடைகளும் துரதிர்ஷ்டங்களும் வரும் என நம்பப்படுகின்றது.
இந்த காரணத்திற்காக பலர் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் குறிப்பாக சனியின் எதிர்மறை செல்வாக்கை எதிர்கொள்ள எலுமிச்சை மிளகாய் சரங்களைத் அவர்கள் இருக்கும் வீடு கடைகளில் தொங்க விடுகிறார்கள்.
இந்த முறையை பின்பற்றினால் எதிர்மறை ஆற்றலை இது உறிஞ்சும் என நம்பப்படுகிறது.
இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற வகையில் இந்த எலுமிச்சை-மிளகாய் சரத்தை தொங்க விடும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
