vastu tips: காற்று மணியை வீட்டில் எங்கே மாட்டினால் அதிர்ஷ்டம்?
பொதுவாக நம் நாட்டில் எப்படி கோவில் மணியோசை நேர்மறையான எண்ணத்தையும், நல்ல வைப்பிரேஷனை தருக்கிறதோ? அதைப்போலவே இந்த காற்றுமணி நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையையும் ஈர்க்கும் என்பது சீன நாட்டினரின் நம்பிக்கையாகும்.
சீனர்களின் நம்பிக்கையின் பிரகாரம் காற்று மணி குறிப்பாக ஐந்து எலமெண்டை(Element) குறிக்கிறது என சொல்லப்படுகறது. நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களையும் கொண்டு 5 எண்ணிக்கையில் வாங்கினால் பஞ்சபூதங்களின் அருளும், ஆசியும் நேர்மறையான ஆற்றலும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
காற்றின் மணிகள் நேர்மறை ஆற்றல், அமைதி, நல்லிணக்கம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கிர்க்கும் என ஃபெங் சுய் மற்றும் வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
தற்காலத்தில் இந்த காற்று மணியை வீட்டில் மாட்டி வைப்பது ட்ரெண்டாகி வருகின்றது. இதை Feng shui காற்று மணி என்றும் சொல்வார்கள். இந்த காற்று மணியில் இருந்து வரும் மெல்லிசை ஓசை வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை தருவதுடன் வீ்ட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் விரட்டியக்கும் எனவும் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இது குறித்த முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த திசையில் வைக்க வேண்டும் ?
பொதுவாகவே வீட்டில் நேர்மறையான ஆற்றல் அதிகரிக்க பல விதமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவது அல்லது அழகுப்படுத்துவது வழக்கம்.
அது நம்முடைய நாட்டு கலாச்சாரமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு கலாச்சாரமாக இருந்தாலும் சரி அதனால் நல்லது நடக்கும் என்றால் பெரும்பாலானவர்கள் அதை முயற்ச்சிப்பார்கள்.
வாஸ்து பிரகாரம் வீட்டில் தொங்கவிடப்படும் காற்று மணிகள் சிவப்பு, பச்சை, வெண்மை என்று இந்த மூன்று நிறங்களில் வாங்குவது சிறப்பாகும்.
சிவப்பு நிறம் வீட்டிற்கு சக்தியையும், ஆற்றலையும் கொடுக்கின்றது. பச்சை நிறம் செல்வத்தையும், செழிப்பையும் அளிக்கும். வெண்மை நிறம் வீட்டிற்கு அமைதியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்று நம்பப்படுகின்றது.
காற்று மணியை வீட்டில் வேகமாக காற்றடிக்கக்கூடிய இடத்தில் வைக்கவே கூடாது. நல்ல மென்மையாக காற்றடிக்கும் இடத்தில் மாத்திரமே இதை தொங்கவிட வேண்டும்.
இந்த காற்று மணியை தோட்டத்தில் வைக்கக்கூடாது. வீட்டின் முன்புறம் வைக்கலாம். வீட்டு அறையில் ஜன்னல் ஓரத்தில் வைக்கலாம். குறிப்பாக காற்று மணி அடிக்கும் ஓசை மென்மையாக கேட்க வேண்டும், அப்போது தான் இது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் காற்று மணியை தொங்கவிட சில இடங்கள் உள்ளன. முக்கியமாக, வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் காற்று மணியை தொங்கவிடுவது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.
வடக்கு திசை நீர் தத்துவத்துடன் தொடர்புடையது, இது பணம் மற்றும் புதிய வாய்ப்புகளை ஈர்க்கும். கிழக்கு திசை சூரியன் மற்றும் நல்ல ஆற்றலுடன் தொடர்புடையது, மேலும் இது ஆரோக்கியம் மற்றும் குடும்ப உறவுகளை மேம்படுத்த உதவும்.
வடகிழக்கு திசை ஞானம் மற்றும் அமைதியுடன் தொடர்புடையது, மேலும் இது வீட்டின் ஒட்டுமொத்த நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்று நம்பப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
