பேயால் ஏற்படும் கொடூர மரணம்: தப்பிக்க வழி தான் என்ன? இந்தியாவில் நடக்கும் விசித்திரம்
இன்றைய உலகில் அமானுஷ்யம், பேய் என்ற ஒன்று இருக்கின்றதா? இல்லையா? என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் தெரியாமல் இருந்து வருகின்றது.
ஆனால் சில மக்கள் பேய், அமானுஷ்யம் இவற்றினை நம்புவதுடன், அதற்காக பல கோவில்களுக்கும் செல்கின்றனர்.
ஆம் பேய் ஓட்டுவதற்கு பிரபலமான கோவிலாக ராஜஸ்தானில் இருக்கும் கோவில் ஒன்று இருக்கின்றது.
மெஹந்திபூர் பாலாஜி மந்திர் என்ற கோவில் ராஜஸ்தான் மாநிலத்தில் தவுசா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜெய்ப்பூரில் இருந்து 99 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மெஹந்திபூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் ஆவிகள், பேய்கள் மற்றும் பிற தீய சக்திகளில் இருந்து தங்களை விடுவிப்பதற்காக மெஹந்திபூர் பாலாஜி கோயிலுக்கு வருகிறார்கள்.
மிக தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் கூட இங்கு வந்து பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு திரும்பிச் செல்வதாகவும் கூறப்படுகின்றது.
எப்படி இந்த கோவிலுக்கு வந்த உடன் அவர்களுக்கு ஆவிகள், பேய்கள் மற்றும் பிற தீய சக்திகளால் வரும் பிரச்சனைகள் தீர்க்கிறது என்பது இன்னும் யாருக்கும் புரியாத புதிராகவே இருந்துவருவதுடன், இதுகுறித்து தகவல்களை விரிவாக காணொளியில் காணலாம்.