பணத்திற்கு பஞ்சமே இருக்க கூடாதா? அப்போ இந்த நாட்களில் தலைக்கு குளிக்காதீர்கள்
பொதுவாகவே இந்து சமயத்தில் ஒவ்வொரு விடயத்துக்கும் சாஸ்திரம் பார்க்கப்படுவது வழக்கம். ஆனால் அவற்றில் பல விடயங்கள் வெறுமனே மூட நம்பிக்கையாக மாத்திரம் இருந்துவிடுவதில்லை.
நமது முன்னோர்கள் சாஸ்திரம் என்று பின்பற்றிய பல விடயங்கள் தற்போது அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டு விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தவகையில் இந்து மதத்தில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாளுக்கான விதிகளும் கூட இந்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
குளிக்க கூடாத நாட்கள்
அதன் அடிப்படையில் வாரத்தில் இந்த நாட்களில் தலைக்கு குளித்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது என்கின்றனர் ஜோதிடர்கள். இந்து மதத்தில் காலை முதல் இரவு வரை பல விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
மேலும், இந்த விதிகளை மீறினால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, தலைக்கு குளிப்பது தொடர்பான விதிகளையும் பின்பற்ற வேண்டும். அதன் படி, வாரத்தின் சில நாட்களில் பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது.
குறிப்பாக திருமணமாகாத பெண்கள் புதன் கிழமை தலைக்கு குளிக்க கூடாது. திருமணமாகாத பெண்கள் இந்நாளில் குளித்தால் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும்.
திருமணமான பெண்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் குளிக்கக் கூடாது என்று ஜோதிடம் கூறுகிறது. திருமணமான பெண் இந்த நாட்களில் குளித்தால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், வெள்ளிக் கிழமை லட்சுமி தேவிக்கு உரியது. எனவே, திருமணமான பெண்கள் இந்நாளில் நீராடி, லட்சுமி தேவியை வழிபட்டால், லட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.அதனால் செல்வத்திற்கு குறைவே இருக்காது. எல்லா வகையான நிதி பிரச்சினைகளும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்கை அமையும்.
வியாழக்கிழமைகளில் ஆண்கள் ,பெண்கள் இருபாலரும் தலைக்கு குளிக்கக் கூடாது என்று கூறுகிறது சாஸ்திரம். பெற்றோரை இழந்தவர்கள் அமாவாசை அன்று தலைக்கு குளிக்கலாம்.
பெற்றோர் இருப்பவர்கள் தலைக்கு குளிக்கக் கூடாது என்று கூறுவது உண்டு. அதேபோல் கணவரை இழந்த பெண்கள் மட்டுமே அமாவாசை அன்று தலைக்கு குளிக்கலாம். இந்த சாஸ்திரத்தை பின்பற்றினால் பணப்பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |