முடி அதிகமாக கொட்டுகிறதா? வெந்தயத்தையும் கருவேப்பிலையும் இப்படி தேய்ங்க
இன்றைய நவீன காலக்கட்டத்தில் மக்களிடம் பொதுவான பாதிப்பாக முடி உதிர்தல் போன்றவை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக தூசி மற்றும் மாசு போன்ற வெளிப்புற காரணிகள், மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை சிக்கல்கள் ஆகியவை முக்கிய காரணமாக அமைகிறது. இதனால், நம் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நாம் தீவிரமாக செயல்பட வேண்டும்.
நன்றாக தலைக்கு குளித்த பின் தலைமுடிக்கு இயற்கையான பொருட்களைப் கொண்டு தயாரிக்கப்படும் மருந்தை தடவ வேண்டும். இது உங்கள் தலை முடி ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முடி உதிர்தலைக் குறைப்பதும், மேம்பட்ட வளர்ச்சிக்கும் உதவும். மேலும், முடிகள் வளர்வதற்கு நீங்கள் வெந்தயம் மற்றும் கருவேப்பிலையை பயன்படுத்த துவங்கலாம்.
வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை மூலம் தலைமுடியைச் சுத்தம் செய்வது எப்படி செய்யாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
¼ கப் வெந்தயம்
15 முதல் 20 கறிவேப்பிலை
தண்ணீர்
வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை ஒன்றாக அரைக்கவும். இதை நீங்கள் கைமுறையாக செய்யலாம் அல்லது பிளெண்டரைப் பயன்படுத்தலாம்.
இப்போது, ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.