கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது அவசியம் தானா? பலரும் அறியாத உண்மை இதோ
பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது தான் கூந்தல். ஆனால் கூந்தலை பராமரிப்பது என்பது மிகவும் கடினமே. சிலர் தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதை விரும்ப மாட்டார்கள். அவ்வாறு நினைப்பவர்களுக்கான பதிவே இதுவாகும்.
கூந்தலுக்கு எண்ணெய் அவசியமா?
கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது அவசியம் தான். நல்லெண்ணெய் சன் ஸ்கிரீனாகவும் வேலை செய்யும். வாரம் முழுவதும் வெயிலில் அலைவதால் சூரியக் கதிர்கள் நம் சருமத்திலும் கூந்தலிலும் பாதிப்பகளை ஏற்படுத்தும். இந்த பாதிப்பிலிருந்து பாதுகாக்கக்கூடியது தான் நல்லெண்ணெய்.
கூந்தல் வறண்டிருக்கிறது, பொடுகு பிரச்சினை உள்ளது, அரிப்பு இருக்கிறது ன்றால் அதற்கேற்ப எண்ணெய் வைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகள் தீவிரமாகாமல் தடுக்கலாம்.
ஐந்தெண்ணெய் காம்பினேஷனான நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் கடுகெண்ணெய் என ஐந்திலும் சம அளவு எடுத்து கலந்து பயன்படுத்தலாம்.
தலைக்கு குளித்துவிட்டு ஈரத்துடன் எண்ணெய் வைக்கும் போது செபேஷியஸ் சுரப்பியிலிருந்து சுரக்கும் எண்ணெய், கூந்தலில் உள்ள ஈரப்பதம் எல்லாம் சேர்த்து ஒரு வித தொற்றை ஏற்படுத்தும். இதன் அறிகுறி வெளியில் தெரியாது. ஆனால், சொரியும் போது விரல்களில் அழுக்காக, பிசுபிசுப்பாக வரும்.
எண்ணெய் தடவி அரை மணிநேரம் ஊறிய பிறகு சீயக்காயோ, சாம்புவோ உபயோகித்துக் குளிக்கலாம். இதனால் எண்ணெய் வைப்பதன் பலன்களும் கூந்தலுக்குக் கிடைக்கும். கூந்தலும் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.