இந்த ஒரே ஒரு எண்ணெய் போதும்: முடி உதிர்தல் பிரச்சினையே இருக்காது
பெண்களின் அழகிற்கு மேலும் அழகு கொடுப்பது முடி தான். இன்றைய உலகில் பெண்கள் சந்திக்கும் மிக அதிகமான பிரச்சினையும் மு உதிர்தல்.
இவ்வாறு முடிஉதிர்வுக்கு நிரந்தர தீர்வு நாம் வீட்டில் தயாரிக்கும் எண்ணெய் மட்டுமே போதும். அதனை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த எண்ணெயை பயன்படுத்தும் மூலம் முடிக்கு தேவையான ஊட்ட்சத்துக்கள் கிடைக்கும். முடி வளர்ச்சியையும் தூண்டும்.
தேவையானவை:
பாதாம் எண்ணெய் - 50 மி
ஆமணக்கு எண்ணெய் - 30 மி
செம்பருத்தி இலை - 5
நெல்லிக்காய் சாறு - 30 மி
வேம்பு இலைகள் - 20
ஆலிவ் எண்ணெய் - 100 மி
செய்முறை:
ஒரு அடி கணமான பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், செம்பருத்தி இலைகள், நெல்லிக்காய் சாறு, வேம்பு இலைகள் ஆகியவற்றை ஒன்றாக போட்டு நன்கு கலந்து அடிப்பில் வைத்து சூடு செய்யவும். நன்றாக கொதித்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து போத்தலில் அடைத்து வைக்கவும்.
ஆலிவ் எண்ணெய்: முடி உதிர்தலை தவிர்க்கும்.
ஆமணக்கு எண்ணெய்: கூந்தல் வறட்சியை நீக்கும்.
பாதாம் எண்ணெய்: வைடமின் சி உள்ளதால் முடி உதிர்வை தடுக்கும்.
செம்பருத்தி : முடியை மேன்மையாக்கும்.
நெல்லிக்காய்: முடி வளர்சியை தூண்டும். நரை பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணி.