முடி அதிகம் கொட்டுதா? ஷாம்புவுடன் இதை கலந்தால் போதும்- கிடுகிடுவென வளரும்
இன்றைய காலத்தில் இளவயதிலேயே தலைமுடி பிரச்சனை தலைதூக்கத் தொடங்கிவிட்டது, இளநரை, இளவயதில் வழுக்கை விழுதல், கொத்து கொத்தாக முடி கொட்டுவது என பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதற்கு காரணம் மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் என கூறலாம்.
இதனால் தலைமுடியைப் பராமரிக்க பெரும்பாலானவர்கள் செயற்கையான முறைகளை பின்பற்றுவதால் பக்கவிளைவுகள் வந்துவிடுகின்றன.
எனவே நீங்கள் தினமும் வீட்டில் பயன்படுத்தும் ஷாம்புவை கொண்டே முடிஉதிர்வை தடுப்பது பற்றி பார்க்கலாம்.
செய்முறை
400 ml அளவிற்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள்.
தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் 2 ஸ்பூன் அளவிற்கு தேயிலை தூள் சேர்த்து கொள்ளுங்கள்.
ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளவும், இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாற்றை பிழிந்து கொள்ளுங்கள்.
இதனுடன் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்புவை 2 டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும்.
இந்த கலவையை வேர்க்கால்களில் படும்படி தேய்த்து குளித்து வந்தால் நல்ல பலனை பெறலாம். வாரம் இரண்டு முறை இதனை செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றம் தெரியும்,