ஆண்களே இனி டீ, காபி குடிக்காதீர்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
பொதுவாகவே ஆண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை வழுக்கைப் பிரச்சினை தான். அதிலும் சில ஆண்களுக்கு இளமையிலேயே வழுக்கை வந்துவிடும். இதனால் பலர் கேலி கிண்டல்களுக்கும் ஆளாகியிருப்பார்கள்.
ஆனால் வழுக்கை மரபணுவால் தான் ஏற்படுகின்றது என்று சிலர் சொல்லுவார்கள், இது ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு முக்கிய காரணம் நீங்கள் தான்.
உங்கள் உணவுப்பழக்கத்தால் தான் வழுக்கை விழுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தான் வழுக்கைத் தொடர்பான இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அபாயம்
அந்தவகையில், ஒவ்வொரு நாளும் ஒரு கிளாஸ் சோடா, குளிர் பானங்கள், ஸ்போர்ட்ஸ் பானங்கள் மற்றும் பிற இனிப்பு பானங்களை உட்கொள்வது ஆண்களுக்கு வழுக்கை அபாயத்தை 57% அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
குளிர்பானங்களில் மாத்திரமல்ல நீங்கள் தினமும் டீ, காபி குடிப்பதாலும் வழுக்கை வரும் என்பது ஆய்வின் தகவல்.
மேலும், இனிப்பு பானங்களுடன் ஐஸ்கிரீம், வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை தினமும் சாப்பிடுவதும் வழுக்கை வருவதற்கான முக்கிய காரணங்களாகும்.
ஏனெனில் இவை அனைத்துமே சக்கரை தான், அதாவது அதிக சர்க்கரையால் இன்சுலின் தட்டுபாட்டை உருவாக்கி வருகின்றது.
இதனால் தலைக்கு இரத்த ஓட்டம் சீராக கிடைப்பதில்லை. இரத்த ஓட்டம் சீராக இருந்தால்தான் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
அப்படி இரத்த ஓட்டம் இல்லாதபோது முடியின் வேர்கள் சேதமடைகின்றன. எனவேதான் முடி உதிர்ந்து அந்த இடத்தில் முடி வளர வாய்ப்பு இல்லாமல் போகின்றது.
பொதுவாகவே 50 சதவீத ஆண்களுக்கு 50 வயதிற்கு மேற்பட்ட பிறகே வழுக்கை அதிகரிக்கும்.
மேலும், 25% சதவீத ஆண்களுக்கு 21 வயதிற்கு முன்பே வழுக்கையை பிரச்சனையை ஆரம்பித்துவிடுகிறது.
ஆய்வு
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்நிகழ்வில் உணவு மற்றும் பானங்களின் தரவுகளை சேகரித்த பிறகு, தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் அவர்கள் தெரிவித்ததாவது, சிறுவயதிலேயே வழுக்கை வராமல் இருக்க இனிப்பு பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம், வாழ்நாள் முழுவதும் வழுக்கையை தவிர்க்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 63 சதவீதம் பேர் தினமும் குறைந்தது ஒரு சர்க்கரை நிறைந்த பானத்தையாவது குடிக்கிறார்கள்.
இதனால், வழுக்கை மட்டுமின்றி, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, நீங்கள் தினமும் இவற்றைக் குறைத்துக் கொண்டால் வழுக்கை மற்றும் சர்க்கரை வியாதிகள் மட்டுமல்ல வேறெந்த பாதிப்புகளும் இல்லாமல் வாழலாம்.