குளிர் பானம் குடித்ததும் உயிரிழந்த இளம்பெண்... திருமணமான மறுநாளே அரங்கேறிய அசம்பாவிதம்
திருமணம் செய்த ஒரே நாளில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மகள் காணாமல் போனதால் மாணவியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் மாணவியை அழைத்துச் சென்ற முரளியோ கடந்த 14ம் தேதி அவரை திருமணம் செய்ததுடன், தனது உறவினர் வீட்டில் இருவரும் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவி குளிர் பானம் குடித்து கீழே மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக முரளியும் அவரது உறவினரும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பி
ன்பு மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்த நிலையில், தற்போது மாணவியின் சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
பொலிசார் முரளியிடம் நடத்திய விசாரணையில், மாணவிக்கு ஏற்கெனவே சர்க்கரை வியாதி இருந்ததாகவும், குளிர்பானம் குடித்ததும் மயங்கிவிழுந்துவிடடதாகவும் கூறியுள்ளார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மாணவி உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து போலிஸார் முரளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.