கிடுகிடுவென தலைமுடியை வளர வைக்கும் கறிவேப்பிலை, வெங்காயத் துவையல்!
தினசரி தலை சீவும் பொழுது முடி உதிர்வது இயல்புதான். ஆனால் சில நேரங்களில் எக்கச்சக்கமாக முடி கொட்டி, பெண்களுக்கு அடர்த்தி குறைந்துவிடும். முடி உதிர்வுக்கு பல காரணங்கள் இருக்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடு, அதிகமான மன அழுத்தம், பயன்படுத்தக்கூடிய முடி பராமரிப்பு தயாரிப்புகள், மரபணு காரணங்கள், உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு அதிகப்படியாக முடி உதிர்வு ஏற்படும். ஆனால், முடி வளர்ச்சிக்கு பல வகையான தீர்வுகள் இருக்கிறது. அதனால் கவலையை விடுங்கள்...
இந்த கறிவேப்பிலை, வெங்காயத் துவையலை வாரம் 3 முறை சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்திலேயே உங்களுக்கு முடி செழித்து வளர ஆரம்பித்து விடும்.
எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள் -
கறிவேப்பிலை - 6 கப்
சின்ன வெங்காயம் - 20
காய்ந்த மிளகாய் - 6
நல்லெண்ணெய் - 4 கரண்டி
பூண்டு - 10
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை -
ஒரு வாணலியில் பாத்திரத்தை வைத்து சூடேறியதும், அதில் 4 கரண்டி நல்லெண்ணெய்யை ஊற்ற வேண்டும்.
பின்னர், முதலில் தோலை நீக்கிய பூண்டை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு அதே எண்ணெய்யில் தனித்தனியாக காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
தனித்தனியாக வறுத்தெடுத்த அனைத்தையும் நன்றாக ஆறவிட்டு, ஒரு மிக்ஸியில் போட வேண்டும்.
அதனுடன் சிறிதளவு புளி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு வாணலில் சிறிதளவு நல்லெண்ணைய்யை ஊற்றி, அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்த விழுதை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
சூப்பரான கறிவேப்பிலை, வெங்காயத் துவையல் ரெடி.
வாரத்திற்கு 3 முறை இந்த துவையலை செய்து சாப்பிட்டு வந்தால், முடி உதிர்தல் பிரச்சினை சீக்கிரமே தீர்ந்து, தலைமுடி செழித்து வளர ஆரம்பித்து விடும்.