தலைமுடி வளர்ச்சியை தூண்டும் கசாயம்- எப்படி செய்றாங்க தெரியுமா?
தற்போது இருக்கும் மோசமான உணவுபழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை இவை இரண்டு தலைமுடி, சருமம், உடல் உள்ளிட்ட அனைத்தையும் சேதப்படுத்துகின்றது.
அந்த வகையில், என்ன செய்தாலும் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கிறது, தலைமுடி சரியாக வளரவும் இல்லை என கவலையுடன் இருப்போம். அப்படியானவர்கள் வீட்டில் உள்ள சமையலறையில் அதற்கான தீர்வு இருக்கிறது.
ஆங்கில மருத்துவம் கூட 50% தான் நிவாரணம் கொடுக்கும். மாறாக மூலிகைப் பொருட்கள் கொண்டு கொடுக்கப்படும் சிகிச்சை, 99.9% பலன் கொடுக்கும் என்பது எந்தவித ஐயமும் இருக்கக் கூடாது.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றை மூலிகை பொருட்களில் இருந்துப் பெற்றுக் கொள்ளலாம்.
அப்படியாயின், அடர்த்தியான, நீண்ட மற்றும் வலுவான தலைமுடியை பெற நினைப்பவர்களை இந்த கசாயம் செய்து குடிக்கலாம். இது தொடர்பில் பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெந்தயம் – 1 மேசை கரண்டி
- கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
- புதினா இலை – ஒரு கைப்பிடி
- வல்லாரை இலை (ஐச்சி இலை) – சிறிதளவு (விருப்பப்படி)
- இஞ்சி துண்டு – 1 இன்ச் அளவு
- துளசி இலை – ஒரு கைப்பிடி
- குங்குமப்பூ (விருப்பப்படி) – சில துகள்
- நீர் – 2 கப்
செய்முறை
முதலில் வெந்தயத்தை 30 நிமிடங்கள் நீரில் நன்றாக ஊற வைக்கவும்.
அதன் பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு சூடானதும் ஊற வைத்திருக்கும் வெந்தயம், கருவேப்பிலை, புதினா, வல்லாரை இலை, இஞ்சி துண்டு, துளசி இலை ஆகிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
மிதமான தீயில் இந்த மூலிகைபொருட்கள் அனைத்தும் 10-15 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். நீர் பாதியாக குறைந்து பின்னர் நிறம் மாறும்.
அப்போது அடுப்பை அணைத்து விட்டு நீரை வடிக்கட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
இந்த கசாயத்தை சூடாக இருக்கும் பொழுது தலையில் போட்டு மசாஜ் செய்ய வேண்டும்.
மீதி கசாயத்தை குளிக்கும் பொழுது கடைசி வேளையில் தலையில் ஊற்றி நன்கு தலைமுடியை அலசவும்.
இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் தலைமுடி உதிர்வு குறைந்து, தலைமுடி வளர்ச்சி இரட்டிப்பாகும்.
பலன்கள்
- தலைமுடி வேர்களுக்கு இந்த நீர் சென்று வழக்கத்திற்கு மாறாக தலைமுடியை வலுப்படுத்தும்.
- சொட்டையாக இருந்தப்பகுதிகளில் புதிய முடி வளர ஆரம்பிக்கும். நாளடைவில் நல்ல மாற்றம் இருக்கும்.
- உலர் தோல் பிரச்சினையால் தான் தலைமுடி அதிகமாக உதிர்கின்றன. இப்படி செய்யும் பொழுது அப்படியான பிரச்சினைகள் வருவது குறையும்.
- ஏற்கனவே கொட்டிய தலைமுடிக்கும் பயன்படுத்திய பின்னர் பார்க்கும் தலைமுடிக்கும் வித்தியாசம் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |