கூந்தல் வளர்ச்சிக்கு செமிக்கல் இல்லாத ஷாம்பு: வீட்டிலேயே தயாரிக்கலாம்
பொதுவாகவே நாம் எல்லோருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த முடிப்பிரச்சினை.
இந்தப்பிரச்சினைகளில் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, அடி முடி வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகப்பெரும் தொல்லையாகத் தான் இருக்கிறது.
இந்தப் பிரச்சினைகள் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் இந்த முடிப் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
இந்தப் பிரச்சினைகளுக்கு எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம் அதிலும் பல இயற்கை நலன்கள் நிறைந்த சில பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஷாம்பு தயாரித்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
வீட்டிலேயே செய்யலாம் ஷாம்பு
கடைகளில் வாங்கி பயன்படுத்தும் ஷாம்புவிற்கு பதிலாக வீட்டிலேயே சுத்தமாக தயாரிக்கப்படும் இந்த ஷாம்புவை பயன்படுத்தலாம். அதனை வீட்டில் எப்படி செய்யலாம் என்று தற்போது பார்க்கலாம்.
முதலில் 10 முதல் 12 சோப் நட்ஸ்களை ஓடுகளிலிருந்து விதைகளை அகற்றி நன்கு நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் 1 லீட்டர் தண்ணீரில் 15 நிமிடத்திற்கு கொதிக்க வைத்து அந்த திரவத்தை வடிகட்டிக் கொள்ளவும்.
பிறகு 4 தேக்கரண்டி சீயக்காய் பவுடர், 3 தேக்கரண்டி ஆம்லா பவுடர், 1 தேக்கரண்டி வெந்தய பவுடர், 1 தேக்கரண்டி கறிவேப்பிலை பவுடர் மற்றும் வெங்காய பவுடர் போன்ற பொருட்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒன்றாக கலக்க வேண்டும்.
அந்தப் பாத்திரங்களில் முன்னதாக சோப் நட்ஸ் திரவத்தை கலந்து 2 மணிநேரத்திற்கு ஊற விடவேண்டும் பின்னர் அந்தக் கலவையில் அரை கப் அளவு ரோஸ் வாட்டரை கலந்து வைக்க வேண்டும்.
பிறகு இயற்கையான ஷாம்பு தயாரானதும் ஒரு கண்டெய்னரில் ஊற்றி பாவித்து வர முடி வளர்ச்சியடையும்.
இந்த ஷாம்புவை வைத்து உங்கள் உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்து, பின் உங்கள் தலைமுடி முழுவதும் தடவி சில நிமிடங்கள் ஷாம்புவை ஊற வைத்து பின் முடியை நன்கு அலசவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |