கொத்து கொத்தாக தலைமுடியை வளர வைக்கும் ஷாம்பு! இதை மட்டும் சேர்த்தால் போதும்
கொத்து கொத்தாக முடி கொட்டுகிறது என பெண்கள் கவலைப்படுவார்கள்.
இது போன்ற பிரச்சினைகள் போதியளவு ஊட்டச்சத்துக்கள் இன்மை, நோய்கான அறிகுறி, போதியளவு கால்சியம் இன்மை போன்ற காரணங்களால் தான் ஏற்படுகிறது.
இதனை தடுப்பதற்கு சிலர் எண்ணெய் அல்லது நிறைய ஷாம்பு வகைகள் பயன்படுத்துவார்கள். ஆனால் முறையான சிகிச்சை பெறவிட்டால் காலப்போக்கில் தலை சொட்டாகி விடும்.
அந்த வகையில் எமது கிராமங்களில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு புதிய ஷாம்பு பயன்படுத்தினால் நாளடைவில் நல்ல மாற்றத்தை கண்கூடாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சமையல் சோடா - 2 மேசைக்கரண்டி
- டீ ட்ரீ எண்ணெய் - சில துளிகள்
- ஆப்பிள் சைடர் வினிகர் - 2 மேசைக்கரண்டி
- தண்ணீர் - 6 மேசைக்கரண்டி
தயாரிப்பு முறை
முதலில் ஒரு கின்னத்தில் மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். அளவு ரொம்ப முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த கலவையை தலைமுடி நனைத்த பின்னர் தலையில் பூச வேண்டும். உச்சந்தலையிலிருந்து நுனி முடி வரை குறித்த ஷாம்பு அப்ளை செய்யப்பட வேண்டும்.
இதில் முக்கியமாக இருக்கும் டீ ட்ரீ எண்ணெய் தலைமுடியை நன்கு வளர வைக்கும். இதனால் தான் அதிக பேர் இந்த எண்ணெயை பயன்படுத்துகிறார்கள்.
முக்கிய குறிப்பு
அலற்சி ஏற்பட்டால் குறித்த ஷாம்பு பாவனையை நிறுத்த வேண்டும்.