தினமும் தலைக்கு குளித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
தலைமுடியை சீராக பராமரிக்க வாரத்திற்கு இருமுறை தலைக்கு குளித்தல் சிறந்தது என கூறப்படுகிறது.
எனவே தான் அழுக்குகள் சேராமல், பொடுகு தொல்லையின்றி முடி கொட்டாமல் பாதுகாக்கலாம்.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் தினந்தோறும் தலைமுடியை அலசுகின்றனர், இதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஏனெனில் மென்மையான தலைமுடியை அளவுக்கு அதிகமாக அலசினால் முடி உடைவது அதிகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி தினந்தோறும் ஷாம்பு பயன்படுத்தும் போது, அதிலுள்ள கெமிக்கல்கள் நாளடைவில் முடியினை சேதப்படுத்திவிடுமாம்.
குறிப்பாக உலர்ந்த கூந்தல் முடி கொண்டவர்கள் தினமும் தலைமுடியை அலச தேவையில்லை, ஏனெனில் உச்சந்தலைக்கு ஈரப்பதம் அவசியமான ஒன்று.
இதேபோன்று முடி ஈரமாக இருக்கும் போது, சீப்பினை கொண்டு சீவக்கூடாது, இதனால் முடி சேதமடைந்து உடைவது அதிகமாக இருக்கும்.
முக்கிய குறிப்பு
தலைக்கு குளிக்கும் போது ஷாம்புவை நேரடியாக தலைமுடியில் தேய்க்காமல், கைகளில் கொட்டி சிறிது தண்ணீர் கலந்துவிட்டு தலைக்கு தேய்ப்பதே சிறந்தது, ஏனெனில் இது நேரடியாக கெமிக்கல்கள் தலைமுடியில் சேர்வதை தடுக்கிறது.