வெந்நீரில் குளிப்பது இதமாக தான் இருக்கும்... அதனால் கூந்தல் பாதிக்கப்படுமா?
பொதுவாக முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போன்றே கூந்தல் தொடர்பிலும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். ஏனெனில் முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய இடம் வகிக்கின்றது.
தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி சுற்றுச்சூழல் மாசு மற்றும் இரசாயனம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்பதுத்தல் போன்ற காரணங்களினால் பல்வேறுப்பட்ட கூந்தல் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடியை வைத்திருக்க அனைவரும் விரும்புகின்றோம். ஆனால் இதற்கு பின்னால் பல வேலைகளை செய்ய வேண்டி உள்ளது. முடியை பராமரிப்பதற்கு ஊட்டச்சத்தை விட அதிகம் தேவைப்படுகிறது.
முடியில் தூசி, பொடுகு இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம். இல்லை என்றால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படும்.
தலைமுடியை எத்தனை நாளுக்கு ஒரு முறை கழுவ வேண்டும், என்ன மாதிரியான ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும், கண்டிஷனர் எப்படி பயன்படுத்தலாம், என்ன ஹேர் மாஸ்க்கு செய்ய வேண்டும், முடி நன்கு வளர என்ன சாப்பிட வேண்டும் என்ற கேள்விகளுக்கு மத்தியில், முடியை கழுவ குளிர்ந்த நீர் அல்லது சூடான நீர், இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வியும் உள்ளது.
வெந்நீரில் குளிப்பதால் கூந்தல் பாதிப்படையுமா?
மருத்துவர்கள் கருத்து மருத்துவர்கள் கூறியுள்ள அறிவுறுத்தலின் படி, வெந்நீர் முடிக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
ஏனெனில் அது முடியை நீரிழப்பு செய்து, உலர்ந்ததாகவும், உடையக்கூடியதாகவும் மற்றும் கடுமையானதாகவும் மாற்றுகிறது.
இதனால் குளிர்ந்த நீரே முடிக்கு சிறந்தது, ஏனெனில் அவை முடியை சேதப்படுத்தாது, அதற்கு பதிலாக அவற்றை பராமரிக்கிறது.
முடிந்தவரை குளிர்ந்த அல்லது சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரை முடிக்கு பயன்படுத்துவது முக்கியம்.
கண்டிஷனர் அல்லது ஹேர் மாஸ்க் முடிக்கு தடவி இருந்தால், அவற்றை தண்ணீரை வைத்து நன்கு கழுவுவதும் முக்கியம். மேலும், ஒவ்வொரு முடி வகைக்கும் ஒவ்வொரு முறையில் முடி பராமரிப்பு அவசியம். முடியில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் தினசரி கழுவுவது நல்லது.
அதனால் பொடுகு தொல்லை குறையும். இருப்பினும், எண்ணெய் பசையுள்ள முடியை கழுவு ஷாம்பு மற்றும் கண்டிஷனரை சிறிது பயன்படுத்துவது அவசியம்.
சிலருக்கு மரபியல் ரீதியாக முடி உதிர்கிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சல்பேட் இல்லாத ஷாம்பூக்களை கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை உதிர்ந்த முடியைக் கழுவுவது நல்லது.
இந்த ஷாம்புகள் உங்கள் தலைமுடியின் இயற்கையான எண்ணெய்களை தக்கவைத்து மேலும் உலர்த்துவதை தடுக்க உதவுகின்றது.
முடியை ஆழமாக வளர செய்ய உதவும் இயற்கை வெண்ணெய் மற்றும் சாறுகள் நிறைந்த ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவது சிறந்தது.
சுருள் முடி அல்லது சுருட்டை முடிகளை பராமரிப்பது கடினமாக இருக்கும். சுருள் முடியை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை லேசான அல்லது சல்பேட் இல்லாத ஷாம்பு அல்லது கண்டிஷனர் மூலம் கழுவலாம்.
முடி கொட்டாமல் இருக்க ஈரமான முடியை சீப்பு கொண்டு சீவாமல் இருப்பது நல்லது. மேலும் கூந்தல் உதிர்வதை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் அகன்ற பல் கொண்ட சீப்பை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் இது முடியின் வேர் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |