அதிகமாக முடி உடைந்து உங்கள் அழகை குறைக்கின்றதா? அப்போ இது உங்களுக்காகத்தான்!
பொதுவாகவே பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல் என்பது மிகவும் விருப்பமானதொன்று தான். ஆனால் அந்தக்காலத்தில் இருந்தவர்களுக்கு எல்லாம் தரையை தட்டும் அளவிற்கு முடி வளர்ந்திருக்கும்.
அவர்கள் அப்போது எந்த ஷாம்பும் பயன்படுத்தியது இல்லை, எந்த எண்ணெய்யும் பயன்படுத்தியது இயற்கை பொருட்களைக் கொண்டு இயற்கையாகவே அழகான முடியைக் கொண்டிருந்தார்கள்.
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உடைந்து வீணாகிறது.
முடியைக் காப்பாற்றும் பூண்டு
பூண்டில் உள்ள துத்தநாகம், கால்சியம், சல்பர், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உச்சந்தலையில் உள்ள பிரச்சனைகளை குறைக்கிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின்கள் புதிய முடிகள் வளர உதவுகிறது.
அந்தப் பூண்டைக் கொண்டு பூண்டு எண்ணெய் தயாரிக்கலாம் எப்படி தெரியுமா? 8 கிராம்பு பூண்டு, அரை கப் ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 வெங்காயம் தேவைப்படும்.
வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி பூண்டு சேர்த்து பேஸ்ட் செய்துக் கொள்ளலாம். பிறகு ஒரு பாத்திரத்தில் அரை கப் ஆலிவ் எண்ணெயை சூடாக்கி அதில் பூண்டு-வெங்காயம் விழுது சேர்த்து இந்தக் கலவையை மிதமான தீயில் வறுக்கவும்.
பேஸ்ட் பழுப்பு நிறமாக மாறியதும், தீயை அணைத்து ஆறவிடவும். பிறகு நன்றாக வடிகட்டி அந்த எண்ணெயை உச்சந்தலையில் நன்கு தடவவும்.
தலையில் எண்ணெய் தடவி 30 முதல் 45 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள்.
பின்னர் உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு கழுவவும். வாரத்தில் 3-4 நாட்கள் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் இது முடி உதிர்வது குறைந்து போகும்.