தலையில் கை வச்சாவே முடி கொட்டுதா? உதிர்வை நிறுத்தி வேகமாக வளர வைக்கும் விதை
பொதுவாக மற்ற உணவுகள் சாப்பிடுவதிலும் பார்க்க விதைகள் சாப்பிடும் பொழுது ஏகப்பட்ட சத்துக்கள் உடலுடன் சேர்கின்றன.
இதன்படி, ஒவ்வொரு நாளும் சியா விதைகள் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக முடி உதிர்தலால் பாதிக்கப்பட்டவர்கள் சியா விதைகளை சாப்பிடுவதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
ஏனெனின் தற்போது இருக்கும் முறையற்ற வாழ்க்கை முறையால் பலருக்கும் முடி உதிர்வு பிரச்சினை அதிகரித்து வருகின்றது.
அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சினையுள்ளவர்கள் தலைமுடி வளர்ச்சிக்கு தினமும் எடுக்க வேண்டிய சூப்பர்ஃபுட்களில் சியா விதைகளும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
சியா விதை முடி வளர்ச்சியை துண்டுமா?
மற்ற விதைகளிலும் பார்க்க சியா விதைகளில் அதிகமான சத்துக்கள் இருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சியா விதைகளிலுள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், புரதம், துத்தநாகம், இரும்பு சத்து ஆகியன அத்தியாவசிய தாதுக்களுக்காக பார்க்கப்படுகின்றது. சியா விதைகள் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கான சக்தி மையம் என்று கூறலாம்.
தினசரி எடுக்கலாமா?
- சியா விதைகளை தயிரில் கலந்து சாப்பிடலாம்.
- சத்தான சியா புட்டு தயாரித்து தினமும் சாப்பிடலாம்.
- இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் அந்த நீருடன் தேவையான அளவு நீர் சேர்த்து குடிக்கலாம்.
- இப்படி தினமும் சியா விதைகளை தவறாமல் உட்கொண்டால் தலைமுடி உதிர்வை கட்டுபாட்டிற்குள் கொண்டு வரலாம்.
- சியா விதைகளை தொடர்ந்து குடித்து வரும் பொழுது ஒட்டுமொத்த முடி அமைப்பிலும் மாற்றம் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |