கரு கரு நீண்ட கூந்தலுக்கு - இந்த ரகசிய எண்ணெய் செய்து 3 முறை போடுங்க
அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்றால் அதற்கு வீட்டிலேயே ஒரு எண்ணெய் தயாரித்து அதை வாரத்திற்கு மூன்று முறை போட்டு வர வேண்டும்.
கூந்தல் வளர்ச்சி எண்ணெய்
பொதுவாக கூந்தல் நீளமாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். இதற்காக பல விலையுயர்ந்த பொருட்களும் விலையுயர்ந்த எண்ணெய்களும் பயன்படுத்துவார்கள்.
ஆனால் இது எல்லாம் பலன் கொடுக்காது. பாலிவுட் அழகி மாதுரி தீட்சித்தின் தன்னுடைய நீண்ட மற்றும் கருகருவென்ற அழகிய கூந்தலின் எண்ணெய் ரகசியத்தை கூறியுள்ளார் அதை பதிவில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இந்த எண்ணெய் செய்ய ½ கப் தேங்காய் எண்ணெய் 15-20 கறிவேப்பிலை 1 தேக்கரண்டி வெந்தயம் விதைகள் 1 சிறிய வெங்காயம் (நறுக்கியது) போன்ற பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை குறைந்த தீயில் சூடாக்கவும். தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை, வெந்தயம், வெங்காயம் சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை அணைக்கவும்.
பின்னர் எண்ணெயை ஆற வைத்து, வடிகட்டவும். இந்த எண்ணெயை நீங்கள் சேமித்து வைக்கலாம். ஒரு கண்ணாடி போத்தலில் ஊற்றி சேமித்து வையுங்கள்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை உங்கள் உச்சந்தலையில் நன்கு தடவி சில மணி நேரம் அப்படியே வைக்கவும். இதை வாரத்தில் 3 முறை போடவும். இந்த எண்ணெய் முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடியை பலப்படுத்துகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |