நடுசாமத்தில் விழிப்பு வருதா? இதுவும் காரணமாக இருக்கலாம்
பொதுவாக சிலருக்கு படுத்துவுடன் தூக்கம் வருவது குறைவாக காணப்படும்.
இந்த பிரச்சினையால் அதிக தலைவலி, மனழுத்தம், வேலையில் குறவைான கவனம் போன்ற பிரச்சினைகள் எழும். இதனை சரியாக குணப்படுத்தாவிட்டால் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
மேலும் இது போன்ற தருணங்களில் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் படுத்தவுடன் தூக்கம் வராமல் அவஸ்தைப்படுபவர்கள் செய்ய வேண்டியவைகள் குறித்து பதிவில் பார்க்கலாம்.
தூக்கம் இல்லாமல் இருக்க காரணம்
1. தற்போது பலருக்கம் தலைவலி, கவனச்சிதறல் மற்றும் மன அழுத்தம் போன்ற பல கோளாறுகள் உள்ளன. இதனால் இரவில் அவர்களின் தூக்கம் கெட்டு விடுகிறது. நீங்கள் வீட்டில் இருந்து வேலைப் பார்க்கும் நபராக இருந்தால் முடிந்தளவு பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடும் பொழுது 3 மணி நேரத்திற்கு மேல் போகாமல் இருப்பது அவசியம்.

2. படிப்பு, வேலை காரணமாக பலரும் இரவில் தூக்கம் இருப்பது இல்லை. முடிந்தளவு பகல் வேளையில் முடித்து விட்டு, இரவு நிம்மதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். நாள் முழுவதும் வேலை செய்யும் உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு தேவை.
3. தினசரி உடற்பயிற்சி செய்யும் பொழுது நிம்மதியான தூக்கம் கிடைக்கும். உதாரணமாக தினமும் காலையில் நடைப்பயிற்சி, ஓடுவது, சைக்கிளிங் அல்லது உடற்பயிற்சி செய்வது நிம்மதியை தரும்.

4. மதியம் அல்லது மாலை வேளைகளில் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். குளிர் பானங்கள், சாக்லேட்டுகள் மற்றும் சீஸ் ஆகிய உணவுகள் தூக்கத்தை கெடுக்கும். அதனால் முடிந்தளவு இது போன்ற பானங்களை மாலை வேளைகளில் தவிர்க்க வேண்டும்.
5. தற்போது இருக்கும் வேலை பளு காரணமாக இரவில் தாமதமாக உணவு எடுப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். தவறான உணவுப்பழக்கங்கள் இதனை அதிகப்படுத்தும். கொழுப்பு நிறைந்த உணவுகளுக்குப் பதிலாக எளிதில் செரிமானத்திற்கு ஏற்றால் போன்று உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |