கியாங்கஞ்ச் பகுதி சென்றால் மரணம் இல்லாத வாழ்வு கிடைக்குமா? இமயமலையில் மர்மம் சடங்கு!
பூமியில் பிறந்த அனைத்து உயிர்களுக்கு பிறப்பு இருப்பது போல் இறப்பும் இருக்கின்றது.
ஆனால் இது உலகறிந்த உண்மை என்றாலும் சில வழிபாடுகள், சடங்குகள், ஆன்மீக தகவல்களை இவற்றை கட்டுபடுத்தலாம் எனக்கூறுகின்றது.
அந்த வகையில் தற்போது இருக்கும் கலியுகத்தில் பிள்ளையின் நேரம் - காலம் என்பவற்றை குறித்து வைத்து விட்டு குழந்தை பிறப்பை அறிவிக்கிறார்கள்.
மேலும் இவ்வாறு செய்தால் அவர்களின் வாழ்க்கை இன்னல்கள் இல்லாமல் இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி பல நூறு ஆண்டுகளாக கடவுளுக்கு தவம் இருக்கும் அடியார்கள் சாகா வரம் பெறுவார்கள் என புராணக்கதைகள் கூறுகின்றது.
இது உண்மை தானா? அப்படியென்றால் இறப்பு இல்லாமல் வாழலாமா? என தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பிறப்பை மிஞ்சிய இறப்பு
இந்தியாவில் இருக்கும் , இமயமலையில் திபெத் பகுதிகளை சுற்றி இருக்கும் கியாங்கஞ்ச் பகுதி அழியாமை மற்றும் சாகாவரம் குறித்த பல மர்மங்களை உள்ளடக்கி உள்ளது என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பழங்கால இடத்தை இதுவரையில் யாரும் கண்டது இல்லையாம். ஆனால் புத்தகங்களில் இது தொடர்பான குறிப்புக்கள் இருக்கின்றாதாம்.
அந்த வகையில் குறித்த இடம் நேபாளம், உத்தரகண்ட் அல்லது இமாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளில் மறைந்திருக்கும் என கணிப்பாளர்கள் கணித்துள்ளார்கள்.
சில வேளைகளில் இந்த இடம் கண்ணிற்கு தெரிந்தால் தமிழகத்தை விட இந்த இடத்தில் தான் சனத்தொகை அதிகமாக இருக்கும்.
தென்பட்டாலும் அவ்வளவு இலகுவாக இந்த இடத்திற்கு செல்ல முடியாது என அந்த கதைகள் கூறுகின்றது.
புராணங்களில் இது தொடர்பான விளக்கம் என்ன?
கியாங்கஞ்ச் பகுதியில் ஆன்மீக சக்தி கொண்ட யோகிகள், முனிவர்கள் பலர் வாழ்ந்து வாழ்ந்துள்ளார்கள்.
இவர்களால் இந்த இடம் சாகா வரம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இங்கு செல்ல வேண்டும் என்றால் கர்மங்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டுமாம்.
இது தொடர்பில் பௌத்த நூலில் விரிவாகவும் செல்வதற்கான வரிபடமும் உள்ளதாம். ஆனால் திசைகள் யாராலும் கண்டுபிடிக்க முடியாதாம்.
முக்கிய குறிப்பு
இது ஒரு நம்பிக்கை மாத்திரம் தான் இது ஆய்வு ரீதியாக உறுதியாகவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |