சைந்தவியை மிஞ்சிய அழகில் மகள்.. வாயடைத்து போன GV பிரகாஷ்- எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க
ஜி.வி பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டாலும் அவர்களின் மகளுக்காக சில சமயங்களில் ஒன்றாக இருப்பதை காணலாம். அப்படி இருக்கும் சமயத்தில் மகளின் தற்போது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.
இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் இவரின் சினிமா வாழ்க்கை அத்தோடு ஆரம்பித்தது.
இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை பெற்றோர்கள் சம்பதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையொன்று இருக்கின்றது.

இந்த நிலையில் சமிபத்தில் GV பிரகாஷ்- சைந்தவி இருவரும் தனித்து வாழப்போவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.
சைந்தவியை மிஞ்சிய அழகில் மகள்
இந்த நிலையில், கடந்த மாதம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஆனாலும் தீபாவளி நாளில் இருவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது.

எது எப்படி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் GV பிரகாஷ் தற்போது அவருடைய மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தில் பார்க்கும் பொழுது அப்படியே சைந்தவியை பார்ப்பது போன்று இருக்கிறது. இதற்கு , “ அப்படியே அம்மாவை போல் இருக்கிறாரே..” என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |