குருப்பெயர்ச்சி பலன்கள்: இன்று மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி; என்னென்ன பலன்களை கொடுப்பார்?
குருபகவான் ஆனவர் தன் பார்வை பலத்தால் அனைத்தையும் வளம் பெறச் செய்யும் சக்தி உள்ளது. குரு தான் நின்ற இடத்தை விட பார்த்த இடத்தை புனிதப் படுத்துவார்.
குரு பார்த்த இடம் கோடி நன்மை பெறும். குருபகவானால், மட்டுமே பணம், திருமணம், புத்திர பாக்கியம், தொழில், உத்தியோக உயர்வு என பாக்கியம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் விருத்தியாக்கும் சக்தி படைத்தவர்.
இந்நிலையில்,குருவின் பார்வை பதியும் மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசியினரும், தன லாப ஸ்தானத்தில் நிற்கும் மகரம், மேஷ ராசியினரும் ஏதாவது ஒரு வகையில் மேன்மை அடைவார்கள்.
ஒரு ராசியில் தோராயமாக ஓராண்டு சஞ்சரிக்கும் குருபகவான் மகரம், கும்பம் என்ற இரண்டு ராசிகளிலும் வக்ரம், அதிசாரம் என மாறி மாறி கடந்த ஒரு வருடமாக சஞ்சாரம் செய்தார்.
தற்போது கும்பத்தில் 5 மாதங்கள் மட்டுமே சஞ்சரிக்கப் போவதால் எந்த ராசியினருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதியாகக் கூறலாம்.
குருவானவர் ஏப்ரல் 2022ல் குரு மீனத்திற்குச் செல்கிறார். ராகு மேஷத்திற்கும் கேது துலாத்திற்கும் செல்வதால் பல பெரிய நல்ல மாற்றங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படப்போவது உறுதி. எனவே இந்த குறுகிய காலத்தை சிறிய எளிமையான இறைவழிபாடு மற்றும் பரிகாரங்கள் மூலம் கடக்க முடியும்.
மேலும், இந்த காலகட்டத்தில் சனி பகவான் மகரத்திலும், ராகு பகவான் ரிஷபத்திலும் கேது பகவான் விருச்சிகத்திலும் உலாவும் கிரக அமைப்பைப் பொறுத்தும் இந்த குருப்பெயர்ச்சி கூறப்பட்டுள்ளது.
இந்த குருப் பெயர்ச்சி அனைவருக்கும் விரும்பிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்திட பிரபஞ்சத்தையும் நவகிரகங்களையும் மண்டியிட்டு பிரார்த்தனை செய்யலாம்.