குரு வக்ர பெயர்ச்சி - இன்றிலிருந்து 119 நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?
குரு பகவான் கடக ராசியில் உச்சமாக சஞ்சரிக்கும் பொழுது வக்கிரமாகி பின்னோக்கி செல்லும் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த வக்ர பெயர்ச்சி டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை கடக ராசியிலேயே சஞ்சரித்து அதற்குப் பிறகு மிதுன ராசிக்கு மீண்டும் ஒருமுறை குரு வக்ரப் பெயர்ச்சி நடந்து மார்ச் மாதம் வரை அதே நிலையில் இருப்பார்.

பின்னர், மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல் வாரம் வரை மிதுன ராசியில் நேராக சஞ்சரித்து, 2026 குரு பெயர்ச்சி கடக ராசியில் நடக்கும்.
குரு பகவான் வக்கிரமாக சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில், மூன்று ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அந்த ராசிகள் பற்றி பதிவில் பார்க்கலாம்.
| மிதுனம் | மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்பம் மற்றும் வருமானத்தை குறிக்கும் இடத்தில் குரு வக்ரமாக இருப்பதால் உங்களுக்கு வருமானத்தடை அல்லது சுப காரியத்தில் தடை ஏற்படுத்தலாம். டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் குரு வக்ரமாக இருப்பதால் சில நன்மைகள் கிடைக்கும். இருந்தும் வாழ்க்கைத் துணை கூட்டுத்தொழில் மற்றும் உத்தியோக ரீதியாக சின்ன சின்ன பின்னடைவுகளை ஏற்படுத்தக்கூடும். |
| கும்பம் | கும்ப ராசிக்காரர்களுக்கும் வருமானம் வியாபாரம் உள்ளிட்டவற்றில் குருபகவான் வக்ரமாகி இருப்பதால் உங்களுக்கு வருமானத்தில் பிரச்சனைகள் வரும். வருமானத்தில் தடை அல்லது எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்காத நிலை உண்டாகலாம். ஏதாவது புதிய முயற்ச்சிகள் பலன் தராமல் போகலாம். குடும்பத்தினருக்காக குழந்தைகளுக்காக திடீர் செலவுகள், கடன் வாங்கும் சூழல் போன்றவை ஏற்படலாம். |
| துலாம் | துலாம் ராசிக்காரர்களுக்கு குரு வக்ரப் பெயர்ச்சி டிசம்பர் வரை மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். டிசம்பர் முதல் மாதம் வரை எதிர்ப்பார்ப்புகள் பெரிய அளவுக்கு நிறைவேறாமல் ஒருவிதமான சஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை தரும். அதிர்ஷ்டம் கை கொடுக்காமல் போகலாம். அவசரப்பட்டு எந்த காரியத்தையும் செய்வதை தவிர்க்க வேண்டும். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).