குருவின் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் வரை குபேர யோகத்தை பெறும் ராசிகள் இதோ
சுப கிரகமாக கருதப்படும் குரு பகவானின் ராசி மாற்றம், மற்றும் நட்சத்திர மாற்றம் ஜோதிடத்தில் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இந்த மாற்றங்களினால் சில ராசியினர் சுப விளைவுகளை சந்திக்க நேரிடும்.
குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் பெயர்ச்சியவதன் விளைவு அனைத்து ராசிகளுக்கும் காணப்படும் என்றாலும், சில ராசியினர் நற்பலன்களையும் பெறுகின்றனர்.
மேஷம்:
மேஷ ராசியைப் பொறுத்த வரையில் எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு கிடைப்பதுடன் வியாபாரத்தில் மகத்தான வெற்றியும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும்.
மிதுனம்:
குரு நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசியினருக்கு இந்த நேரத்தில் அனைத்து விருப்பங்களும் நிறைவேறுவதுடன், திடீர் பண வரவு, திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் முழுமையான மகிழ்ச்சியை அள்ளித் தருவார். அரசு வேலைகளுக்காக தயாராகி வருபவர்களுக்கு இந்த நேரத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு ஏற்படும். முதலீட்டால் லாபம் காணலாம்.
துலாம்:
துலாம் ராசிக்கு அனைத்து விடயங்களிலும் மிகவும் சாதகமான சூழ்நிலை ஏற்படுவதுடன், வியாபாரத்தில் வெற்றியும், பண பலனும் உண்டாகும்... புதிய வேலை விரைவில் கிடைக்குமாம்.
தனுசு:
குருபகவான் பரணி நட்சத்திரத்தில் நுழையும் தருணத்தில் தனுசு ராசியினருக்கு பண பலன்கள் கிடைப்பதுடன், உடல் மற்றும் மன உபாதைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதுடன், குடும்பத்தில் புதிய விருந்தினர் வரவும் வாய்ப்புள்ளது.