குருபெயர்ச்சி 2023! ராஜயோகத்தை தட்டித் தூக்கும் 5 ராசிகள் யார்?
குரு பகவானின் பெயர்ச்சி ஒருவரின் நல்ல காலத்தை தீர்மானிப்பதாக இருக்கின்றது. இந்த பெயர்ச்சி கஜலஷ்மி யோகத்தை உருவாக்குவதுடன், இதனால் ஏழரை நாட்டு சனியால் பாதிக்கப்பட்டவர்களின் தோஷம் குறைவதுடன் நன்மையும் கிடைக்கின்றது.
தற்போது இந்த யோகத்தினால் அதிர்ஷ்டத்தினை பெரும் ஐந்து ராசிகளை இங்கே பதிவில் காணலாம்.
மேஷம்
குரு மேஷ ராசியில் கோச்சாரம் செய்வது அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் அளிப்பதுடன், முதல் வீட்டில் ராகு, சூரியன், குரு, புதன் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த அரிய சேர்க்கையினால் செல்வந்தர்களாக இந்த ராசிக்காரர்கள் மாறுவார்களாம்.
மிதுன ராசி
இந்த ராசியில் ராகு, சூரியன், புதன், வியாழன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை அனுகூலமான சூழ்நிலையை ஏற்படுவதுடன், சிறப்பான பலன்களையும், வியாபாரத்தில் அதிக வெற்றியையும் பார்க்க முடியுமாம்.
மகர ராசி
நான்காம் இடமான மகர ராசியில் இந்த யோகம் அமைவதால், குறித்த ராசிக்காரர்களுக்கு, பணபலமும், மன வலிமையும் கிடைப்பதுடன், வாகனம், நிலம் வாங்க வாய்ப்புகள் ஏற்படுவதுடன், பதவி உயர்வும் கிடைக்கின்றது.
சிம்ம ராசி
சிம்ம ராசியில் ஒன்பதாம் வீட்டில் இந்த அரிய சேர்க்கை நடைபெற உள்ளதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் குறித்த ராசியினர் பெறுவார்கள். நீண்ட நாட்களாக இழுத்தடித்த பணம் விரைவில் கைக்கு வரும்.
மீன ராசி
குறித்த கிரகங்களின் கூட்டணி மீனத்தில் இரண்டாம் இடத்தில் உருவாக உள்ள நிலையில், நிதி நன்மையுடன், ஆரொக்கியமும், தொழிலில் சிறப்பான முடிவுகளும் எடுக்க முடியும்.