பாதையை மாற்றும் குரு பகவான் - 2026 கஷ்ட காலத்தில் இருந்து விடுபடும் 4 ராசிகள்
2026 ஆம் ஆண்டு குரு பகவான் தனது பாதையை மாற்றி பயணிப்பதால் அதன் மூலம் பல நனமைகளை பெற உள்ளனர். அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.
பாதை மாற்றும் குருபகவான்
குருபகவான் மார்ச் 11, 2026 அன்று வக்ர நிலையில் இருந்து மாறி தனது நேரடி பயணத்தை தொடங்குகிறார். இந்த வக்ரமான நேரடி பயணம் பல ராசிகளுக்கு நன்மைகளை தரும் ஒரு முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது.
குரு பகவான் நேர் கதி பெயர்ச்சி அவர் ஆசீர்வாதங்கள் முழுமையாக கிடைக்க அனைத்து வாழ்வில் வளர்ச்சி, செழிப்பு, நேர்மறை மாற்றங்கள் அதிகரிக்கும்.

தடைபட்டிருந்த முயற்சிகள், தொழில்கள், வேலை தேடுதல் இனி வேகம் பெறும். நிதி நிலைமை மேம்படும். பணவர வாய்ப்புகள் மற்றும் புதிய வழிகள் திறக்கப்படும்.
எனவே மார்ச் மாதத்தில் இருந்து எந்த ராசிகள் கூடுதல் பயனை பெறுவார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் இரண்டாம் வீட்டில் குரு நேரடியாக வருவதால் பணப்புழக்கம் அதிகரித்து, பொருளாதாரம் பலம் பெற்று, புதிய வருமான வாய்ப்புகள் உருவாகி, குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை, பேசும் வார்த்தைகளுக்கு மதிப்பு உயர்ந்து, தொழில்-சமூகத்தில் மதிப்பு அதிகரித்து, வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கான சாதக நிலை தோன்றும்.நிதி நிலமையில் முன்னேறி செல்வீர்கள். 2026ம் ஆண்டு உங்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் மூன்றாம் வீடான சகோதரர், வீரம், முயற்சி ஸ்தானம் இடத்திற்கு குரு பகவான் நேரடி நிலைக்கு வருவதால் ரிஷப ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையைப் பெறுவார்களாம். இந்த கால கட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக செல்லும் பயணங்களின் மூலம் வெற்றி உண்டாகும். எந்த விடயத்திலும் ஆர்வம் இருக்கும் இதனாலேயே வெற்றியும் கிடைக்கும்.

கன்னி
11-வது லாப ஸ்தானத்தில் குரு நேரடியாக வருவது என்பது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் அரிய, சக்திவாய்ந்த, பலன்கள் கொடுக்கும் காலம். இதனால் உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்து ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நல்ல ஆதரவை பெறுவீர்கள். 2026ம் நல்ல காலமாக இருக்கும்.

மகரம்
மகர ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு பகவான் நேரடி நிலைக்கு வருகிறார். இந்த வீடானது கணவன் மனைவி, கூட்டாளி, தொழில் பங்குதாரர் ஆகியோரை குறிக்கும் ஸ்தானமாகும். இதனால் மகர ராசியினர் வாழ்க்கையில் திருமணம் மற்றும் தொழில் உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணத்தில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகி நல்ல துணை கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்னோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).