சிம்ம ராசியில் இணையும் குரு, செவ்வாய்! அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினர்
சிம்ம ராசியில் குரு மற்றும் செவ்வாய் இணைவதால் அதிர்ஷ்டத்தினை பெறும் 3 ராசியினரை தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் கிரகங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தினை மாற்றுவது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
நவம்பர் 16 அன்று சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் குரு என இரண்டு கிரகங்கள் ஒன்றினைந்து குரு மங்கள யோகம் என்ற நிகழ்வு ஏற்படுகின்றது.
இந்த நிகழ்வினால் சில ராசியினருக்கு தொழில் மற்றும் நிதி சார்ந்த புதிய வாய்ப்பு கிடைக்குமாம். மேலும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் வருமான உயர்வு, பணியிடத்தில் கூடுதல் அங்கீகாரம் இவற்றினையும் பெறுகின்றனர். அவை எந்ததெந்த ராசியினர் என்று தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த யோகத்தினால் நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வாழ்க்கையில் நிதி வளர்ச்சி கிடைப்பதுடன், உழைப்பிற்கேற்ற வேலை வாய்ப்பும் இந்த காலத்தில் கிடைக்கும்.
இதனால் நிதி சிக்கல்கள் முடிவிற்கு வருவதுடன், வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இந்த காலக்கட்டம் சிறப்பாக இருக்குமாம்.
புதிய ஒப்பந்தத்தினை வணிக உரிமையாளர்கள் பெறுவதுடன், பண ஆதாயமும் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு சிறப்பான நன்மை மற்றும் அதிர்ஷ்டம் கிடைப்பதுடன், தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
நிதி நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைவதுடன், இந்த யோகத்தினால் தன்னம்பிக்கை அதிகரித்து உற்சாகமாக சூழலை வாழ்க்கையில் பெறுவீர்கள்.
வணிக ரீதியாக இருப்பவர்களுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைப்பதுடன், புதிய திட்டத்தினை தொடங்கவும் பொருத்தமான நேரமாக இவை இருக்குமாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த யோகத்தினால் முன்னேற்றம் மற்றும் வாய்ப்புகளை பெறுவதுடன், இக்காலக்கட்டத்தில் சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள்.
தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிப்பதுடன், வாழ்க்கையில் உள்ள பல பிரச்சனைகளும் முடிவிற்கு வருமாம். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமைகின்றது.
ஏற்கனவே வைத்துள்ள திட்டங்கள் இப்பொழுது செயல்படுத்துவீர்கள். குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர்வதுடன், வெளிநாடு பயணம், உயர் கல்வி இவற்றினையும் பெற முடியும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |