குருபெயர்ச்சியால் தத்தளிக்கும் ராசியினர்.. உங்களுக்கும் வாய்ப்பு இருக்கா?
நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்குபவர் தான் குரு பகவான்.
இவர், ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பலன் நன்மைகளை பக்தர்களுக்கு கொடுக்கிறார்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான், ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கான அனைத்து விதமான யோகத்தை கொடுப்பார்.
அந்த வகையில், தேவர்களின் குருவாக கொண்டாடப்படும் குருபகவான் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வக்ர பெயர்ச்சியடைந்தார்.
இந்த வக்ர பெயர்ச்சியால் 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அசுபமான பலன்கள் கிடைக்கவுள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அப்படியாயின், அசுபமான பலன்களை யாருக்கெல்லாம் குரு கொடுக்கப்போகிறார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

| மேஷ ராசியில் பிறந்தவர்கள் | மேஷ ராசியில் பிறந்தவர்கள் குரு பகவான் வக்ர நிலையில் இருப்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. நீங்கள் இவ்வளவு நாள் சாதாரணமாக இருந்தது போன்று இனியும் இருக்காதீர்கள். வேலையில் நிறைய பிரச்சினைகள் வரலாம். சற்று அவதானிப்புடன் நடப்பது சிறந்தது. |
| மிதுன ராசியில் பிறந்தவர்கள் | குரு பகவான் வக்ர நிலையில் இருப்பதால் நீங்கள் வேலையில் நிறைய சிக்கல்களை பார்க்கலாம். துணையுடன் சண்டை வருவதற்கான வாய்ப்ப அதிகமாக உள்ளது. எப்போதும் வாக்குவாதங்களில் வாயை கொடுத்து அசிங்கபடாதீர்கள். இது போன்ற நடவடிக்கைகள் சோர்வை உண்டாக்கும். |
| துலாம் ராசியில் பிறந்தவர்கள் | இவ்வளவு நாட்களாக அதிர்ஷ்டத்தை பார்த்த துலாம் ராசியினர் முடிந்தளவு கவனத்துடன் இருக்க வேண்டும். வேலையில் புதிய எதிரிகள் வருவார்கள். நீங்கள் பேசுவது சமூகத்தில் எடுத்து கொள்ளப்படாத நிலை உருவாகும். முடிந்தளவு பிரச்சினைகளை தள்ளி வைப்பது சிறந்தது. உங்களுடன் இருப்பவர்களே உங்களை தவறாக கூறலாம். அவற்றை கண்டு அச்சம் கொள்ளாது, தைரியமாக போராடுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே! |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).