குருவின் ஆதித்திய யோகத்தால்! மே முதல் கொடிகட்டி பறக்கப்போகும் ராசிகள் எவை?
குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகின்றார். இவர் இன்னுமொரு கிரகத்துடன் சேர்ந்து உருவாகும் யோகம் இன்னும் சிறப்பாக பார்க்கப்படுகின்றது.

குருவின் ஆதித்ய யோகம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சிக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு. அதன்படி ஜோதிட ரீதியாக குருபகவான் ஒரு மங்களகரமான கிரகமாக பார்க்கப்படுகின்றார்.

இந்த நிலையில் குருவின் ஒவ்வொரு அசைவும் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் குரு சூரிய கிரகத்துடன் சேர்ந்து ஆதித்ய யோகத்தை உண்டாக்கிறது.
இதனால் குறிப்பிட்ட பல ராசிகள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான பலன்களை பெறப்போகினற்னர். மே மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த மே மாதத்தில் பல ராசிகள் தற்கள் வெற்றிபாதை நோக்கி செல்ல பல கிரகப்பெயர்ச்சிகள் காரணமாக இருக்கிறன்றது.

ரிஷபம்
- ஆதித்ய ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும். குருவின் அருளால் உங்களது நீண்ட நாள் கனவு நனவாகும். முயற்ச்சி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அதிகரிக்கும். சொத்து, வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
கன்னி
- குருவின் அருளால் கன்னி ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றலை உண்டாகும். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். புதிய தொழில் கனவு நனவாகும். கூட்டுத் தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். உங்களுக்கு இருந்து வந்த பெரிய தடைகள் நீங்கும். நகை, சொத்து, வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்.
மகரம்
- ஆதித்ய ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வத்தை உண்டாகும். புதிய தொழில் தொடங்க தகுந்த காலம் இது. தொழிலில் பிரச்சனைகள் தீரும். உடன் பிறந்தவர்கள நிதி ரீதியாக பலமடைவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் பாராட்டுகளை கிடைக்கும். மே மாதத்தில் வாகனம், வீடு வாங்கும் யோகம் கைகூடும். பணத்திற்கான பிரச்சனை குறையும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).