குரு - சூரியன் சேர்க்கை : செல்வத்தில் புரளப்போகும் ராசிகள் யார்?
சூரியனும் குருவும் சேர்ந்து தற்போது ஒரு அரிய யோகத்தை உருவாக்குகின்றனர். இதனால் குறிப்பிட்ட ராசிகள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி செல்லப்போகின்றனர்.

குரு சூரியன் சேர்க்கை
2026 மே மாதத்தில் சூரிய பகவான் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே கிரகங்களில் மங்களகரமான கிரகமான குரு இருக்கிறார்.
இவ்விரு கிரகங்களின் சேர்க்கை ஜோதிடத்தில் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. சூரியன் என்பது ஆற்றல் மற்றும் அதிகாரத்தின் அடையாளமாக இருக்கிறார். குரு என்பது அறிவு மற்றும் வழிகாட்டுதலின் அடையாளம்.

இவர்கள் இருவரும் இணையும் போது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிந்தனையில் தெளிவும், செயலில் வேகமும் பிறக்கும். மேலும் இது புதிய உருவாக்கமாக இருக்கும்.
இந்த நன்மைகளை பெறும் அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
- ரிஷபத்தில் குருவும் சூரியனும் சேர்வது உங்கள் பொருளாதார வளர்ச்சியை அதிகமாக்கும். தங்கம், வெள்ளி மற்றும் பங்குச் சந்தையில் நிலையான முதலீடுகள் செய்தால் அதிக லாபம் கிடைக்கும். நீங்கள் என்ன முயற்ச்சி எடுத்தாலும் அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். நீங்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் உணர்வீர்கள்.
கன்னி
- கன்னி ராசியினருக்கு இந்த சேர்க்கை ஒன்பதாம் பார்வையைப் பெறுகிறது. இதனால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தொழில் நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் செல்லலாம். பெரியோர்களின் ஆசியால் பெரிய தடைகள் விலகும். நிங்கள் இதுவரை நினைத்த காரியம் தற்போது நிறைவாகும். குடும்பத்தில் இருந்த பண பிரச்சனை நீங்கும்.
மகரம்
- மகர ராசியினருக்கு ஐந்தாம் பார்வையைப் பெறுகிறது. இதனால் பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய சொத்துக்கள் அல்லது நிலம் வாங்கும் சந்தர்பம் வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குறிப்பாக ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி பயில்வோருக்கு இது மிகச் சிறந்த காலம். ஆன்மீகச் சிந்தனைகள் அதிகரிக்கும். பணத்திற்கான வரவு அதிகமாகும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |