கெத்து காட்டிய குணசேகரனை கொத்தாக தூக்கிய பொலிஸ்... எதிர்பாராத திருப்பம்
எதிர்நீச்சல் சீரியலில் கெத்து காட்டிய குணசேகரனை பொலிசார் கொத்தாக அழைத்துச் சென்றுள்ள ப்ரொமோ வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தி நடித்துவரும் நிலையில், இவரது என்ட்ரி பயங்கரமாக இருந்தது. அதிலும் வந்த வேகத்தில் ஈஸ்வரியை பளார் பளார் என்று தாக்கியுள்ளார்.
இவ்வாறு வீட்டில் அனைவரையும் நடுநடுங்க வைத்த குணசேகரனை பொலிசார் அவரது தம்பிகளுடன் கொத்தாக தூக்கிச் சென்றுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |