சமந்தா கட்டியிருக்கும் இந்த சேலையின் விலை எவ்வளவு தெரியுமா? ஷாக்காகிடாதீங்க!
நடிகை சமந்தா அணிந்துள்ள புடவையின் விலை குறித்து அதிகமாக இணையத்தில் பெண் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
சமந்தாவை அவரது பேஷனுக்காகவே ஏராளமான இளம் பெண்கள் பின்பற்றி வருகின்றனர்.
அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வரும் சமந்தா, பேஷன் உடைகள் மற்றும் ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைல்களுக்கான ட்ரெண்ட் செட்டராக மாறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா புடவை முதல் மார்டன் உடைகள் வரை விதவிதமான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
குறிப்பாக துடுக்கான பார்வையுடன் மிடுக்காக போஸ் கொடுத்துள்ள சமந்தாவின் புடவை பல இளம் பெண்களின் கண்களையும் உறுத்த ஆரம்பித்துள்ளது.
எனவே சமந்தா அணிந்துள்ள புடவை எங்கே கிடைக்கும், என்ன விலை என இணையத்தில் தேடலை ஆரம்பித்துள்ளனர்.
சமந்தா அணிந்துள்ள கையால் நெய்யப்பட்ட இந்த புடவையின் விலை 32.800 ரூபாய் ஆகும். இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.