தொங்கும் தொப்பையை குறைக்க என்ன வழி? அப்போ தினமும் இந்த இலை சாறு குடிங்க
ஆப்பிள் பழத்திற்கு இணையான சத்துக் கொண்ட பழங்களில் கொய்யா முக்கிய இடத்தை பிடிக்கிறது.
அதிலுள்ள சுவை மற்றும் மணம் மக்களை கவரச் செய்யும். அதே போன்று அனைத்து மக்களாலும் வாங்கக் கூடிய விலையில் தான் விற்பனையாகிறது.
இந்த கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். பழத்தை போன்று இலையில் உள்ள சாற்றிலும் உடலுக்கு தேவையான பல ஊட்டசத்துக்கள் உள்ளன. மனித உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் நிறைந்துள்ளன.
மேலும் இந்த இலைகளில் பாலிஃபீனால்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்திருப்பதால் இலையின் சாற்றை குடிக்கலாம்.
அந்த வகையில் கொய்யா இலை சாற்றில் வேறு என்னென்ன பலன்கள் உள்ளன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
கொய்யா இலை சாற்றின் பலன்கள்
1. கொய்யா இலை சாறு தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் நோய் தொற்றுக்கள் வருவது குறைவாக இருக்கும். வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்களாக மாற வாய்ப்பு உள்ளது.
2. கொய்யா இலையில் உள்ள சாறு செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த இலைகளை தினமும் சாப்பிடும் பொழுது உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். செரிமான தொடர்பான பிரச்சினைகள் சரிச் செய்யும் ஆற்றல் கொய்யா இலைக்கு அதிகமாக உள்ளது.
3. உடல் எடையைக் குறைப்பதற்கு டயட்டில் இருப்பவர்கள் கொய்யா இலை சாறு குடிக்கலாம். இதில் உள்ள மெட்டபாலிச விகிதம் உடலில் சீராக இருக்கும். கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொய்யா இலைக்கு இருப்பதால் கலோரிகள் குறைக்கப்படுகின்றன. நார்ச்சத்து அதிகம் உள்ள சாற்றை குடிக்கும் பொழுது வயிறு நிரம்பியிருக்கும்.
4. கொய்யா இலை சாற்றை குடித்து வந்தால் வெறும் உள்ளுறுப்புக்களின் ஆரோக்கியம் தவிர சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. கொய்யா இலைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பை தடுகிறது.
5. கொய்யா இலை சாற்றினை குடித்து வரும் ஒருவரின் சருமம் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. கொய்யா இலைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும்.
6. கொய்யா இலை சாற்றில் உள்ள ஊட்டசத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக்கும். அதே சமயம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சும் ஆற்றலும் உள்ளது. தினமும் காலையில் இந்த சாற்றை குடிக்கும் பொழுது உடல் சோர்வு மற்றும் உணவின் மீதான் நாட்டம் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
